நீரிழிவு நோயாளிகள் பிரட்ல ஏன் வொயிட் பிரட் கண்டிப்பா சாப்பிடக்கூடாது? தெரிஞ்சிக்கோங்க... இனி சாப்பிடாதீங்க...
வொயிட் பிரட் போன்ற துரித உணவுகள் மைதா மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலானவர்களின் காலை உணவாக வொயிட் பிரட் தான் இருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் இதை விரைவில் நீங்கள் தயார் செய்ய முடியும். மேலும் சுவையான ஒன்றாகவும் இது இருக்கிறது. ஆனால் ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவுகள் என்று வரும் போது அதில் வொயிட் பிரட் இடம் பெறுவதில்லை.
இந்த வொயிட் பிரட்டை கொண்டு சாண்ட்விட்ச், பிரட் ஆம்லெட், பிரட் டோஸ்ட் போன்ற பலவித துரித உணவுகளை மக்கள் தயாரித்து சாப்பிடுகின்றனர்.
வொயிட் பிரட் ஏன் சாப்பிடக் கூடாது?
வொயிட் பிரட்டை தயாரிக்க கோதுமை மாவை வெவ்வேறு வேதிப் பொருட்களை பயன்படுத்தி வெளுக்கின்றனர்.
அதனால் தான் மாவானது வெண்மையாக தோன்றுகிறது.
பென்சாயில் பெராக்சைடு, குளோரின் டை ஆக்சைடு, பொட்டாசியம் ப்ரோமேட் போன்ற வேதிப்பொருட்கள் மாவில் சேர்க்கப்படுகின்றனர்.
அதைத் தொடர்ந்து இதில் சுத்திகரிக்கப்பட்ட ஸ்டார்ச், இராசயனங்கள் போன்றவையும் பயன்படுத்தப்படுகிறது. இதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கிறது.
வொயிட் பிரட்டின் ஒரு துண்டு 77 கலோரிகளை கொண்டுள்ளது. இதில் கிளைசெமிக் குறியீடு அளவு அதிகமாக இருக்கும்.
வொயிட் பிரட் பதப்படுத்தப்படுவதால் அதன் ஊட்டச்சத்து மதிப்பு குறைகிறது. எனவே இதை காலை உணவாக சாப்பிடுவது உங்களுக்கு எந்தவித நன்மையும் தராது.
இரத்த சர்க்கரை அளவு உயர்தல்
வொயிட் பிரட் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. வொயிட் பிரட்டின் கிளைசெமிக் குறியீடு அளவு மிகவும் அதிகம். அதாவது இது குளுக்கோஸை இரத்தத்தில் விரைவாக வெளிவிடும். எனவே நீரிழிவு நோயால் பாதிப்படைந்தவர்களுக்கு இது ஆபத்தை விளைவிக்கிறது. இருதய நோய், நரம்பு பாதிப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு இது வழிவகுக்கும்.