கோவில் சுவர்களில் சிவப்பு வெள்ளை கோடுகள் போடப்படுவது ஏன்? பலரும் அறியாத ரகசியம்
பொதுவாகவே நமது முன்னோர்கள் செய்யும் ஒவ்வொரு விடயத்துக்கு பின்னும் ஒரு முக்கிய காரணம் ஒளிந்திருக்கும்.
குறிப்பாகவே தமிழர் பாரம்பரியத்தில் பின்னபற்றப்படும் அனைத்து விடயங்களும் துல்லியமான அறிவியல் பின்னணியை கொண்டுள்ளதென்பது தற்காலத்தில் அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் தழிழில் கூறப்படும் நிறங்களின் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை.
நிறங்களின் பெயர்களில் காணப்படும் ஆழமான கருத்து பற்றிய முழுமையான விபரங்களையும்,எல்லா கோவில்களின் சுவர்களிலும் எதனால் வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்திலான கோடுகள் போடப்படுகின்றது என்பது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
நீலம்
நீல நிறம் தமிழர்களின் மத்தியில் விஷத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகின்றது. மயில்கள் விவசாய நிலங்களில் உள்ள விஷ பாம்புகளையும், விஷ செடிகளையும் தான் உணவாக உட்கொள்கின்றது.
இதனால் தான் அவற்றின் உடலில் அதிகளவான பாகம் நீல நிறத்தில் இருக்கின்றது. நமது உடலில் விஷம் ஏறினாலும் உடல் நீல நிறத்தில் மாறும் தான் மாறுகின்றது.
காவி நிறம்
காவி நிறம் தமிழர்களின் பண்பாட்டின் அடிப்படையில் மண்ணின் அடையாளமாகவே பார்க்கப்படுகின்றது.
மண்ணானது மினக்பெரும் ஆற்றலை வெளிப்படுத்துகின்ற போதும் அமைதியாக இருக்கின்றது. இதனால் தான் பிரபஞ்சத்தின் ஆற்றலை உள்வாங்கும் சக்தி கொண்டவர்கள்,துறவிகள் ஆகியோர் காவி நிறத்தில் உடை அணிகின்றனர்.
பச்சை
பச்சை நிறம் பசுமையின் அடையாளமான பார்க்கப்படுகின்றது. உலகில் இந்த நிறம் நிறைந்திருக்கும் இடங்கள் எப்போதும் செழிப்புடன் இருப்பதாக அர்த்தம். இந்த நிறத்திற்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி இயற்கையிலேயே அதிகம்.
மஞ்சள்
மஞ்சள் நிறம் மங்களகரமதான விடயங்களின் அடையாளமான கருதப்படுகின்றது. மஞ்சள் இயற்கையிலேயே நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றலை அதிகமாக கொண்டுள்ளது. அதனால் தான் முன்னோர்கள் நல்ல நிகழ்வுகளில் மஞ்சளை அதிகம் பயன்படுத்தினார்கள்.
கருப்பு
கருப்பு நிறம் மர்மங்களின் அடையாளமான பார்க்கப்டுகின்றது. அதனால் தான் பண்டைய காலத்து சிலைகள் கருப்பு நிறத்தில் இருக்கின்றனர். இயல்பாகவே கருப்பு நிறத்துக்கு எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் சக்தி அதிகம்.இதனால் தான் மங்களகரமான நிகழ்வுகளின் போது கருப்பு நிறம் தவிர்க்கப்படுகின்றது.
சிவப்பு
தமிழர் பாரம்பரியத்தில் சிவப்பு நிறம் பெண்கள் என்ற அடையாளதை்தை குறிக்கின்றது. இந்த நிறம் குருதி மற்றும் அன்பின் நிறமாக பார்க்கப்படுகின்றது. இந்த உலகில் உயிர்களை உருவாக்கும் சக்தியை பெண்கள் கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு மாதவிடாயின் போது வெளியேறும் குருதியின் அடையாளமாகவே சிவப்பு நிறம் பார்க்கப்படுகின்றது.
வெள்ளை
வெள்ளை நிறம் ஆண்களை குறிக்கின்றது. ஆண்மை, கம்பீரம், மற்றும் வீரத்தின் அடையாளமான வெள்ளை நிறம் அடையாளப்படுத்தப்படுகின்றது.
ஆண்கள் விந்தணுக்களின் நிறமான வெள்ளை உயிர்களின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது. இந்த உலகம் பெண்களாலும், ஆண்களாலும் தான் இயக்கத்தில் இருக்கின்றது என்பதை உணர்த்துவதற்காகவே கோவில்களில் வெள்ளை மற்றும் சிவப்பு கோடுகள் போடப்படுகின்றது.
உயிர்கள் உருவாக தேவையான ஆணின் விந்து வெள்ளை நிறத்திலும், பெண்ணின் கருமுட்டை சிவப்பு நிறத்திலும் இருக்க, இவை இரண்டும் சேர்ந்தே நம் உடல் உருவாகின்றது.
இது சிவன் மற்றும் பார்வதி தேவியையும் இது ஆண் பெண் என்ற ரீதியில் குறிக்கின்றது. அதாவது உயிர் உருவாக வேண்டும் என்றாலும் உலகம் இயங்க வேண்டும் என்றாலும் ஆண்கள் மற்றும் பெண்களின் சம பங்கு இன்றியடையாதது என்பதை உலகுக்கு உணர்தவே இவ்வாறு கோடுகள் கோடப்படுகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |