ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ரஜினிகாந்த்... காரணம் என்ன?
நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வராததற்கு காரணத்தை வெளியிட்டதுடன், ரசிகர்களிடமும், மக்கள் மன்றத்தினரிடமும் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவர் தான் அரசியல் கட்சி தொங்குவதாக முதலில் அறிவித்திருந்தார்.
இதனால் அவரது ஆதரவாளர்கள், ரசிகர்கள் உற்சாகம் அடைந்த நிலையில், இந்த அரசியல் முடிவை கைவிடுவதாக கடந்த 2020ம் ஆண்டு அறிவித்தார். இதற்கான காரணம் என்னவென்று தற்போது வெளியிட்டுள்ளார்.

காரணம் என்ன?
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், கொரோனா காலத்தில் பொதுமக்களை நேரடியாக சந்திக்க முடியாது என்பதாலும், மருத்துவர்களும் உயிருக்கு ஆபத்தாக இருக்கும் என்று எச்சரித்ததால் இவ்வாறான முடிவை எடுத்துள்ளார்.
மேலும் அண்ணாத்த படப்பிடிப்பின் போது திடீரென ரத்த அழுத்தம் மாறுபட்டதால் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது, இறைவன் தன்னை அரசியலுக்கு வர வேண்டும் என்று கொடுத்த எச்சரி்க்கையாக எடுத்துக் கொண்டாராம்.

களத்தில் நிற்கமுடியாது?
தனது உடல்நிலை பாதிப்பினைக் காரணம் காட்டி, தன்னை நம்பி கட்சியிலும், அரசியல் பயணத்திலும் வரும் தொண்டர்களை ஏமாற்றக்கூடாது என்றும் பொதுக்கூட்டம், பிரச்சாரம் என நேரடியாக மக்களை சந்திக்க முடியாமல், சமூக வலைத்தளங்கள் மூலமாக பிரச்சாரம் செய்வது எழுச்சியை ஏற்படுத்தாது என்றும் முடிவு எடுத்துள்ளார்.

அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை என்றாலும் வெளியே இருந்து மக்களுக்கு தன்னால் முடிந்த பணிகளையும், சேவையையும் செய்வதாக கூறியுள்ளார்.
தான் கட்சி ஆரம்பிப்பேன் என பல ஆண்டுகளாக ஆவலாக இருந்த ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளித்ததால் தன்னை மன்னிக்குமாறு பகிரங்கமாக கோரிக்கையில் கேட்டுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |