மரண ஊர்வலத்தில் ஆட்டம் எதற்கு? இந்த கலாசாரம் எப்படி வந்தது தெரியுமா?
மரண ஊர்வலத்தில் ஆட்டம் ஆடுவது என்பது ஒரு கலாசாரப் பழக்கமாக அறியப்படுகின்றது. அதை பார்கும் போது சிலருக்கு வெறுப்பு ஏற்படலாம்.
இறந்ததை ஏன் கொண்டாடுகின்றார்கள்? நியாயமாக கவலை தானே பட வேண்டும் என்ற கருத்து பலருக்கும் இருக்கும்.
இந்த ஆட்டம், பொதுவாக இறந்தவரின் நினைவாகவும், துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் சில கலாசாரங்களில் இன்றுவரையில் நடைமுறையில் உள்ளது. இதற்கான காரணம் குறித்து சத்குருவின் (ஜக்கி வாசுதேவ்) விரிவாக விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன காரணம்?
மரண ஊர்வலத்தில் ஆட்டம் என்பது ஒரு பாரம்பரிய சடங்காக கருதப்படுகிறது. மேலும், இந்த ஆட்டம், இறந்தவர் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்தார் என்பதையும், அவரது ஆன்மா அமைதியாக செல்ல வேண்டும் என்பதையும் குறிக்கிறது.
மரண ஊர்வலத்தில் ஆட்டம் ஆடும் கலாசாரம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இது வெவ்வேறு சமூகங்களில் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகிறது.
சில சமூகங்களில், இது ஒரு சடங்காக செய்யப்படுகிறது, அங்கு பாடகர்களும், நடனக் கலைஞர்களும் இறந்தவரின் நினைவாக ஆடுகிறார்கள்.
வேறு சில சமூகங்களில், குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் இறந்தவருக்காக ஆடுகிறார்கள். மேலும் சில சமூகங்களில், இறந்தவரின் ஆன்மா அமைதியாக செல்ல வேண்டும் என்பதற்காக, இறந்தவர்களை அறியாதவர்கள் கூட சாவு ஊர்வளத்தில் ஆடும் வழக்கம் காணப்படுகின்றது.
சில கலாசாரங்களில் மரண ஊர்வலத்தில் ஆட்டம் ஆடுவது, துக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும்.
இது இறந்தவரின் பிரிவால் ஏற்படும் வலியை குறைக்கவும், ஆறுதல் அளிக்கவும் செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. உண்மையில் மரணம் என்பது ஒரு முடிவாக இல்லாமல், ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
எனவே, இறந்தவரின் ஆத்மா சாந்தியடையவும், அவர்களின் குடும்பத்தினர் துக்கத்திலிருந்து மீண்டு வரவும், இப்படி ஆட்டம் போடுவது ஒரு சடங்காக செய்யப்படுகிறது.
இந்த வாழ்க்கை என்பது ஒரு படிநிலையே தவிர இது நிச்சயம் முடிவு கிடையாது என்ற அறிவு நமது முன்னோர்களிடத்தில் தெளிவாக இருந்ததன் விளைவாகவே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது என சத்குரு குறிப்பிடுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |