செல்போன் வெடிப்பது ஏன்? காரணங்களும், அதன் தீர்வுகளும் இதோ
பெரும்பாலான நேரங்களில் செல்போன் வெடித்து உயிரிழப்பு நேரிடுவதை நாம் அவதானித்து வரும் நிலையில், இதற்கான காரணத்தை தற்போது தெரிந்து கொள்வோம்.
செல்போன்
இன்றைய காலத்தில் செல்போன் என்பது மிகவும் அத்தியாவசியமாக மாறியுள்ளது. பல நன்மைகள் இதில் காணப்பட்டாலும், சில தீமைகளும் இதில் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஒவ்வொரு நபர்களும் தங்களது வசதிக்கு ஏற்ப 2 அல்லது 3 செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது செல்போன் திடீரென வெடிப்பதையும், சில உயிர்கள் பறிபோவதையும் நாம் பார்த்திக்கிறோம்.
பெரும்பாலான நபர்கள் அதிக விலை கொடுத்து அனைத்து வசதிகள் இருக்கும் செல்போன்களை வாங்குகின்றனர்.
குறைவான ப்ராசசர் இருக்கும் செல்போனில் அதிகமான செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது தவறாகும்.
வெடிப்பதற்கு காரணம் என்ன?
அதிக ரேம் கொண்ட பப்ஜி போன்ற விளையாட்டுகளை ஏற்றி விளையாடுவதால் செல்போன் சூடாகி பேட்டரி வெடிக்கும் நிலை ஏற்படுகின்றது.
சார்ஜ் தொடர்ந்து போடுவதாலும் பேட்டரி சூடாகி செயல்திறனை குறைத்து வெடிக்கும் நிலை ஏற்படுகின்றது.
சார்ஜ் போட்டுக்கொண்டே கேம் விளையாடுவது, செல்போன் உபயோகிப்பது போன்ற செயல்களாலும் வெடிக்கக்கூடும்.
இரவு நேரத்தில் மின்சாரம் அதிகமாக வரும், இதனால் இரவில் சார்ஜ் போடுவதால் அதில் உள்ள வாட்ஸ் திறனிற்கு மேல் மின்சாரம் கிடைப்பதால் வெடிக்க கூடும்.
தடுக்கும் வழி என்ன?
இரவில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்குவதை தவிர்க்க வேண்டும். செல்போன் 90 சதவீதம் சார்ஜ் ஆகிவிட்டால், சார்ஜரை துண்டித்துவிட வேண்டும்.
சார்ஜ் போடும் போது செல்போன்களை பாவிப்பதை தவிர்க்க வேண்டும். செல்போன் வாங்கி ஒன்றரை வருடம் கடந்துவிட்டாலே அதன் பேட்டரியின் தன்மை குறைந்து வெடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. சர்வீஸ் சென்டருக்கு சென்று பேட்டரியை மாற்றிக் கொள்ளவும்.
பேட்டரியின் உள்ள வேதிப்பொருட்கள் ஒன்றோடு ஒன்று சேருவதால் கூட பேட்டரி வெடிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இன்டர்நெட் மொபைல் டேட்டாவை தேவைப்படும் போது மட்டும் ஆன் செய்யவும்.
அதிக ரேம் கொண்ட கேம்களை ஏற்றி விளையாடாமல் அந்த செல்போனின் ப்ராசசர்க்கு ஏற்ப உள்ள கேம்களை தான் ஏற்றி விளையாடவும், இதனால் செல்போன் சூடாகுவதை தடுக்க முடியும்.
நாம் செல்போனை பயன்படுத்திய பின், நாம் பயன்படுத்திய ஆப்களை முற்றிலும் கிளியர் செய்து விட வேண்டும்.
செல்போன் வெடிப்பது இரண்டு காரணங்கள் தான் ப்ராசசர் மற்றும் பேட்டரி இதனை மேற்கண்ட வழிமுறைகள் மூலம் முறையாக பயன்படுத்தினால் செல்போன் வெடிப்பது தவிர்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |