ஆண்களுக்கு தன்னை விட வயதில் மூத்த பெண்ணின் மீது காதல் வருவது ஏன்?
பொதுவாகவே காதல் எப்போது யார் மீது ஏற்படும் என்பதை யாராலும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. உண்மையான காதலுக்கு வயது,நிறம்,மதம் மற்றும் அந்தஸ்த்து என எதுவும் முக்கியமாகதாக இருக்காது.
ஆனால் பெரும்பாலும் ஆண்களுக்கு தன்னை விட வயதில் மூத்த பெண்களின் மீது காதல் உணர்வு ஏற்படுவதாக உளவியல் ஆய்வு குறிப்பிடுகின்றது. இதற்காக காரணங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
உளவியல் காரணங்கள்
பொதுவாக இளம் ஆண்கள் தங்களின் வயதுடைய அல்லது தங்களை விட வயது குறைவான பெண்களிடம் எதிர்பார்க்கும் அனைத்தும் தங்களைவிட சற்று வயது கூடிய பெண்ளிடம் அவர்களுக்கு கிடைக்கின்றதாக உணர்கின்றனர்.
வயதில் மூத்த பெண்களிடம் யாருக்கும் பயப்படாமல் சுதந்திரமான இயங்கும் தன்மை. எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளமால் கடந்து போகும் இயல்பு என்பன அதிகமாக காணப்படும்.இதனால் வயது குறைந்த ஆண்களுக்கு அவர்கள் மேல் ஈர்ப்பு அதிகமாக இருக்கின்றது.
குறிப்பாக வயதில் மூத்த பெண்கள் கடினமான சூழலிலும் ஆண்களின் உதவியை எதிர்ப்பார்காமல் தங்களை தாங்களே பார்த்துக் கொள்ளும் நிலையில் இருக்கின்றார்கள்.
அவர்கள் மீது காதல் ஏற்பட இதுவும் ஒரு காரணமாகும். இருப்பினும் எல்லா ஆண்களுக்குமே வயதில் மூத்த பெண்ணிடம் ஈர்ப்பு ஏற்படுவதில்லை.
பொதுவாக மெச்சூரிட்டி இருக்கும் ஆண்கள் மாத்திரமே அதே போல, மன முதிர்ச்சி அதிகம் இருப்பவர்களான வயதில் மூத்த பெண்களின் மீது காதல் கொள்கின்றனர்.
பொதுவாக வயதில் மூத்த பெண்கள் தங்களுக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கும் அதே நேரத்தில் மற்றவர்களுக்கும் அதே மரியாதைணை கொடுக்கின்றார்கள்.
எனவே பரஸ்பர மரியாதையை விரும்பும் ஆண்கள் தங்களை விட சற்று வயது அதிகமாக இருக்ககும் பெண்களால் ஈர்க்கப்படுகின்றனர்.
மேலும் வயதில் மூத்த பெண்கள் பிரச்சினைகள் ஏற்படும் போது அறிவு பூர்வமாக சிந்தித்து தீர்வை கண்டுப்பிடிக்கின்றார்கள். இதனால் இவ்வாறாக பெண்கள் மீது ஆண்களுக்கு காதல் ஏற்படுகின்றது.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |