மதிய உணவில் பாதியாக ஏன் தயிர் சாதம் சாப்பிடணும்.. இனி இத தெரிஞ்சிட்டு சாப்பிடுங்க!
பொதுவாக அனைவராலும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்றாக தயிர் பார்க்கப்படுகின்றது.
இந்த தயிரை காலையில் அல்லது இரவு சாப்பிடுவதை விட மதிய உணவிற்கு பிறகு சாப்பிடுவது நல்லது என்று கூறப்படுகிறது.
இது உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியாக உடலை வைத்து கொள்ளும். அத்துடன் நல்ல பாக்டீரியாக்களான புரோபயாடிக்குகளை வழங்குவதன் மூலம் செரிமானத்தை எளிதாக்குகிறது. இது அமிலத்தன்மையைக் குறைக்கும் மற்றும் உடலை குளிர்விக்க உதவுகிறது.
மேலும் கோடைக்காலங்களை அதிகமான மக்கள் இதனை விரும்பி சாப்பிடுவது வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் தயிரை ஏன் மதிய உணவிற்கு பின் சாப்பிடுகிறார்கள்? இவ்வாறு சாப்பிடுவதால் எமக்கு கிடைக்கும் நன்மைகள்? என்பவற்றை கீழுள்ள பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
தயிரால் ஏற்படும் மாற்றங்கள்
Bully கேங்கை ஒழித்து கட்டிய கமல்.. அடுத்தடுத்து போட்ட குறும்படங்கள்- அவமானத்தில் தலைகுனிந்த போட்டியாளர்கள்!
1. தயிர் சாப்பிடுவது எடை இழப்பு ஏற்படும் என கூறப்படுகின்றது. ஸ்டீராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைத்து கால்சியம் உற்பத்தியை அதிகரிக்கின்றது. இதனால் வயிற்றிலுள்ள கொழுப்பை கரைக்க முடிகிறது.
2. தயிரில் இம்யூனோகுளோபின்கள் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கூறுகள் உள்ளன. இதனால் உடலுள்ள தேவையற்ற பக்றீயாக்களை இது அழிகிறது. இதன் காரணமாக உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கின்றது.
3. தயிர் பெண்கள் அதிகமாக சாப்பிடவேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனின் தயிரில் இருக்கும் ஈஸ்ட் தொற்றுகளின் வளர்ச்சியை குறைத்து லாக்டோபாகிலஸ் அதிகப்படுத்தி யோனி ஈஸ்ட் சமநிலையை சரியாக பேணுகின்றது.
4. கொலஸ்ட்ரால் மற்றும் மன அழுத்தம் பிரச்சினையுள்ளவர்கள் தாராளமாக சாப்பிடலாம். அத்துடன் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயத்தையும் குறைக்கின்றது.
5. தயிர் ஒரு புரோபயாடிக் நிறைந்த பால் தயாரிப்பாகும். இதனை சாப்பிடுவதால் வயிற்றிலுள்ள எறிச்சல், செரிமான கோளாறுகள் சரியாகி விடுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |