இப்போ சரி சொன்னியே.. பதற்றத்தில் உண்மையை உடைத்த செழியன்- நிலைபுரியாமல் நின்ற கோபி!
பதற்றத்தில் கோபியிடம் பாக்கியாவிற்கும் மாலினிக்கு என்ன நடந்தது என்ற உண்மையை உடைத்து கூறியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் பெண்களுக்கான பிரச்சினைகளை எடுத்து பேசும் சீரியலாக பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில், பாக்கியாவின் மூத்த மகன் செழியன் அவனுடைய அப்பாவை போல் ஜெனியை விட்டுட்டு மாலினியுடன் தொடர்பில் இருக்கிறார்.
இந்த விடயம் பாக்கியாவிற்கு தெரிந்த போது மாலினியை கோயிலில் பார்த்து “ இது இனியும் தொடர வேண்டாம். விட்டுட்டு வேலையை பாருங்க..” என்பது போல் சொல்லி விட்டு வருகிறார்.
தவிக்கும் பாக்கியா
ஆனால் மாலினி அதனை கேட்காமல் வீட்டில் அனைவரின் முன்னும் மாலினி புகைப்படத்துடன் நடந்த விடயங்களையும் சில பொய்களையும் சேர்த்து கூறுகிறார்.
செழியனின் இந்த செயலால் மனமுடைந்து போன ஜெனி வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இதனை தாங்க முடியாமல் செழியன் மன்னிப்பு கேட்பதற்காக ஜெனி வீட்டிற்கு செல்கிறார்.
ஆனால் ஜெனியின் தாயார் செழியனை பார்க்க அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து ஈஸ்வரிக்கும் கோல் செய்து அழைத்து செல்லுமாறு கூறுகிறார்.
செழியனை அழைப்பதற்காக கோபி வரும் போது தான், பாக்கியா- செழியனிடம் என்ன கூறினார் என்பதை கூறுகிறார்.
இதனை கேட்ட கோபி அதிர்ச்சியில் செழியனை பார்க்கிறார். ராதிகா பேசிய சரியென இப்போ தான் கோபியிற்கு புரிந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |