ATM-ல் 4 இலக்க PIN நம்பர் வைப்பது ஏன்? யாருக்கும் தெரியாத அறிவியல் காரணம்
வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சி காரணமாக பணத்தை நாம் வீடுகளில் வைப்பதற்கான அவசியம் இல்லை.
மாறாக வங்கி கணக்கில் வைத்து கொண்டே அனைத்து விதமான செலவுகளையும் பார்க்கலாம். அதற்காக பயன்படுத்தும் ATM அட்டைகளில் ஏகப்பட்ட விடயங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
ATM இருப்பது வங்கி சேவையை எளிதாக்குகிறது என்றே கூற வேண்டும். இப்படி இருக்கும் பட்சத்தில் நாம் தினமும் பயன்படுத்தும் ATM அட்டைகளின் ரகசிய இலக்கம் 4 இலக்கங்களில் தான் தீர்மாணிக்கப்படுகிறது.
நகர்ப்புறம், கிராமப்புறம் என இரு தரப்பினரும் இதனை பயன்படுத்தும் பொழுது ரகசிய இலக்கங்கள் எப்படி ஒரே மாதிரி இருப்பதில்லை என்ற சந்தேகமும் பலருக்கும் வந்திருக்கும்.
அந்த வகையில், ATM அட்டைகளில் ஏன் 4 இலக்கங்களை கொண்ட ரகசிய இலக்கங்கள் வைக்கிறார்கள் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

ATM-சேவை தேவையா?
ATM-சேவை இருப்பதால் வரிசையில் காத்திருந்து பணத்தை பெற்றுக் கொள்ள அவசியம் இல்லை. மாறாக அப்படி பயன்படுத்தும் பொழுது 4 இலக்கங்கள் கொண்ட PIN Number இருப்பதை பார்த்திருப்போம்.
இது குறித்து தேடி பார்க்கையில், கடந்த 1925-ஆம் ஆண்டு மேகாலயாவின் ஷில்லாங்கில் பிறந்த ஜான் ஷெப்பர்ட்-பரோன் என்பவர் ATM-சேவை கண்டுபிடித்துள்ளார்.

இவர், அந்த ATM-சேவை இயந்திரத்தை வடிவமைக்கும் பொழுது 6 இலக்கங்கள் கொண்ட ரகசிய இலக்கத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.
மனைவி வைத்து நடத்தப்பட்ட சோதனை
அதன் பின்னர், ATM கார்ட்டை மனைவியிடம் பயன்படுத்த கொடுத்த பொழுது மனைவியால் 6 இலக்கங்கள் கொண்ட ரகசிய இலக்கத்தை நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதை அறிந்து கொள்கிறார்.
மனைவிக்கு வெறும் 4 இலக்கங்களே நினைவில் இருந்துள்ளது. இதனால் தான் ATM அட்டைகளின் ரகசிய இலக்கங்கள் 4 இலக்கங்களில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

இந்த 4 இலக்க எண்கள் 0000 - 9999 வரையில் அமைந்திருக்கும். இந்த நான்கு இலக்கங்கள் பாதுகாப்பானது இல்லை என தெரியவரும் பொழுது 6 இலக்கங்கள் கொண்ட ரகசிய இலக்கங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும், பல நாடுகளில் 6 இலக்க எண்கள் கொண்ட ரகசிய இலக்கங்களே பயன்பாட்டில் உள்ளது.
இந்தியாவில் சில வங்கிகளில் 6 இலக்கங்கள் கொண்ட இரகசிய எண்களே பயன்படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |