ஆயிரம் என்பதற்கு ‘K’ என்ற எழுத்தை பயன்படுத்த என்ன காரணம்னு தெரியுமா?
பொதுவாகவே சமூக வலைதளங்களில் கிடைக்கும் லைக்குகளை பற்றி பேசும் போதும் பணத்தை பற்றி பேசும் போதும் சரி, நாம் ‘1000’ என்ற எண்ணிற்கு ஆங்கில எழுத்தான ‘K’ என்று குறிப்பிடுகின்றோம்.
சரியாக சொல்லப்போனால் ஆயிரம் (Thousand) என்பதன் சுருக்கத்தை T என்று தானே குறிப்பிட வேண்டும். ஏன் ‘K’ என்று குறிப்பிடுகின்றோம்.
இதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா? இது குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன காரணம்?
மில்லியன் என்ற ஆங்கில சொல்லின் சுருக்கம் ‘M’ என்ற எழுத்தும், பில்லியனின் சுருக்கமாக ‘B’ என்ற எழுத்தும் பயன்படுத்தப்படுகின்றது.
ஆனால் ‘1000’ என்ற எண்ணிற்கு மட்டும், ஏன் ‘K’ என்ற சுருக்க வடிவத்தை பயன்படுத்துகின்றோம் என்றால், மேற்கத்திய நாடுகள் பலவும் கிரேக்கம் மற்றும் ரோமன் கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டே தோற்றம் பெற்றது.
‘K’ என்ற சுருக்க வடிவமும் இங்கிருந்து வந்தது தான். கிரேக்கம் மொழியில் ‘chilioi’ என்றால் ஆயிரம் என்று அர்த்தம்.
கிரேக்க வார்த்தையான Chilioi என்பது பிரெஞ்சுக்காரர்களால் கிலோ என பின்னர் அழைக்கப்பட்டது.
அதன் பின்னர் தான் கிலோ மீட்டர், கிலோ கிராம் போன்றவை கணிக்கப்பட்டது. அந்த ‘Kilo’ என்பதற்காக தான் ‘K’ என்ற குறியீடு பயன்படுத்தப்படுகின்றது.
இந்த வழக்கம் கிரேக்க வார்த்தையான "கிலோ" என்பதிலிருந்து வந்தது, அதாவது ஆயிரம். கணிதத்தில் K என்றால் என்ன? கணிதம் மற்றும் எண் குறியீடுகளில், "K" என்ற எழுத்து ஆயிரத்தை குறிக்கிறது. எனவே, "1K" என்பது 1,000 க்கு சமம்.
மேலும் மில்லியன் ‘M’ என்றும், பில்லியன் ‘B’ என்றும் ட்ரில்லியன் என்பதற்கு ‘T’ என்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே தான் ஆயிரம் என்பதற்கும் ‘T’ என்ற எழுத்து பயன்படுத்தினால் குழப்பம் ஏற்படும் என்று தான் ‘K’ என்ற சுருக்க வடிவம் பயன்படுத்தப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |