ஷீட்டிங் இப்படியெல்லாம் நடக்குமா? பாத்ரூமிற்காக சீரியலை விட்டு ஓடிய நடிகை.. அசீம் கொடுத்த ரிப்ளை!
ஷீட்டிங் ஸ்பார்ட்டில் ஓரே பாத்ரூம் கொடுத்த காரணத்தினால் பிரபல சீரியலின் கதாநாயகி சீரியலை விட்டு விலகியுள்ளார்.
பூவே உனக்காக
பிரபல தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களில் “பூவே உனக்காக” சீரியலும் ஒன்று.
இதில் பிக்பாஸ் அசீம், நடிகை பிரீத்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்கள்.
இந்த சீரியலில் பூவரசியாக மக்கள் மனதில் ஆணித்தரமாக பதிந்த பிரீத்தி திடீரென சீரியலை விட்டு விலகிவிட்டார்.
இதனை தொடர்ந்த கதாநாயகி விலகி சிறிய காலப்பகுதியில் சீரியலும் முற்றுப்பெற்று விட்டது.
ஆனால் இதுவரையில் அவர் ஏன் விலகினார் என்ற செய்தி வெளியாகவில்லை.
இப்படியொரு நிலையில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த சீரியல் நடிகை பிரீத்தி ஏன் பூவே உனக்காக சீரியலை விட்டு விலகினேன்? என ஓபனாக கூறியுள்ளார்.
சீரியலை விலக இது தான் காரணம்
அதில், சீரியலின் ஆரம்பத்தில் அசீமிற்கு பதிலாக அருண் என்பவர் இருந்தார். இதற்கு மாற்றீடாக தான் அசீம் வந்தார். இதற்கு பின்னர் கதையும் மாற்றமடைந்து பூவரசி கதாபாத்திரம் வில்லியாக மாறியது.
சரியாக சாப்பாடு கிடையாது. அத்துடன் ஆண்கள், பெண்கள் என தனியாக கூட ஒரு பாத்ரூம் இல்லை. இதன் காரணமாக ஏகப்பட்ட நோய்கள் வந்து விட்டது மருத்துவமனை செல்லக் கூட அனுமதி தரமாட்டார்கள்.
அத்துடன் கதை மாறியதும் மக்கள் என்னை அசிங்கமாக திட்ட ஆரம்பித்து விட்டார்கள். அசீமுடன் சேர்த்து பேசி வந்தார்கள். சக நடிகர் ஒருவரும் தப்பாக பேசினார்.
அப்படி பார்த்தாலும் அசீம் என்னுடைய நண்பர், தெரிந்தவர் அப்படி யாரும் இல்லை. சக நடிகர் அவ்வளவு தான்..” என ஓபனாக பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் இப்படி பூவரிசி கூறியது சின்னத்திரை ரசிகர்களுக்கு பெறும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |