உங்க பாத்ரூம் சுவரில் அடிக்கடி பல்லி இருக்கா? அப்போ இத யூஸ் பண்ணி நிரந்தரமாக விரட்டுங்க!
பொதுவாக அநேகமான வீடுகளில் கரப்பான் பூச்சி மற்றும் பல்லிகள் தொல்லையாகவே இருக்கும்.
இதற்கான முக்கிய காரணம் நம்முடைய வீடு ஏதோவொரு வகையில் அசுத்தமாக இருக்கின்றது.
இது போன்ற உயிரினங்கள் வீட்டில் வாழும் மனிதர்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
அந்த வகையில் வீட்டில் இந்த உயிரினங்கள் அடிக்கடி இருந்தால் கீழ்வரும் டிப்ஸ்களை செய்து பாருங்கள். வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே விரட்டியடிக்க சில குறிப்புகளை பார்க்கலாம்.
பல்லியை விரட்ட சூப்பர் டிப்
1. பல்லியை விரட்ட நாப்தலின் பந்துகளை பயன்படுத்தலாம். இந்த பந்துகளை பயன்படுத்தி உடனடியாக பல்லிகளை விரட்டியடிக்கலாம்.
2. பூண்டு சாற்றை நீரில் கலந்து பல்லி மற்றும் பூச்சிகள் வரும் இடங்களில் அடிக்க வேண்டும். இதன் வாசணைக்கு பல்லிகள் வராது.
3. எந்த இடத்திலிருந்து பல்லி வருகின்றதோ அந்த இடங்களில் கிராம்பை கட்டி தொங்கவிட்டால் வந்த இடம் தெரியாமல் பல்லி ஓடி விடும்.
4. வெங்காயத்தை சாறு எடுத்து தெளித்தால் அவை ஓடிவிடும். ஏனெனில் அவற்றிற்கு இது பிடிக்காத வாசனை என்பதால் வீட்டில் இருந்து விலகி இருக்கும். இதனை அன்றைய நாள் பாவணைக்கு மாத்திரம் பயன்படுத்தவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |