குழந்தைகள் ஏன் தாத்தா பாட்டியுடன் வளர வேண்டும் தெரியுமா?
தற்காலத்தில் பொதுவாக கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்பவர்களாக இருக்கின்றனர். இதனால் குழந்தைகளை சரியாக பராமரிக்க முடியாமலும் அவர்களுடன் நேரத்தை செலவிட முயாமலும் போகின்றது.
முன்னைய காலாத்தில் பெரும்பாலும் மக்கள் கூட்டுக்குடும்பங்களாகவே வாழ்ந்தார்கள். இதனால் குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டியின் அன்பும் அரனைனைப்பு கிடைத்தது. ஆனால் தற்காலத்தில் அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது.
வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் சிலர் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக வேலைக்கு ஆட்களை அமர்த்துவார்கள். அதனால் வேலைக்கு சென்றும் நிம்மாதியாக வேலை பார்க்க முடியாத நிலை ஏற்படும்.
வேலைக்கு செல்லும் பெற்றோரின் குழந்தைகளை தாத்தா, பாட்டியின் பொறுப்பில் விட்டு செல்வது மிகவும் சிறந்தது.
அதனால் குழந்தைகளின் அறிவாற்றல் மேம்படுவதாகவும் அறிவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றது. இது குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
ஏன் தாத்தா, பாட்டியுடன் வளர்வது நல்லது?
பொதுவாக தாத்தா பாட்டிகள் வாழ்ந்து கொண்டிருக்கும் வீடு ஒரு நூலகம் போன்றது. தாத்ததா பாட்டி அவர்களுடைய சொந்த அனுபவங்களை குழந்தைகளுடன் பகிர்ந்துக்கொள்ளும் வாய்ப்பு காணப்படுகின்றது.
தாத்தா-பாட்டிகளுடன் வசிக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரை பிரிந்து அன்னியர்களுடன் இருக்கும் உணர்வு எழாது. வீட்டில் பாதுகாப்புடன் இருப்பதாக உணர்வார்கள். வேலைக்கு செல்லும் பெற்றோர் குழந்தைகள் பற்றிய கவலையின்றி வேலையில் கவனம் செலுத்த முடியும்.
தாத்தா - பாட்டிகளிடம் வளரும் குழந்தைகள் குடும்ப பின்னணியை முழுமையாக தெரிந்து கொள்வார்கள். உறவுகளின் உன்னதத்தையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கொடுப்பார்கள்.
தாத்தா பாட்டியிடம் கதை கேட்டு வளரும் குழந்தைகள் மதிப்பு மிகுந்த வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொள்கின்றார்கள்.அதனால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மேம்படுகின்றது.
தாத்தா பாட்டிகள் எப்பொழுதும் பேரப்பிள்ளைகள் மீது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை செலுத்துகின்றார்கள் இதுவும் பெற்றோரின் அன்புக்கு நிகரானது தான்.அதனால் குழந்தைகள் அன்பானவர்களாக இருக்கின்றார்கள்.
தாத்தா-பாட்டிகளுடன் அதிக நேரத்தை செலவிடும் குழந்தைகள் நிறைய வாழ்வியல் விஷயங்களை கற்றுக்கொள்வார்கள். சிக்கலான சூழ்நிலையை கையாளும் திறமையும் அவர்களிடம் இயல்பாகவே ஏற்படுகின்றது.
தாத்தா- பாட்டியுடன் வளரும் குழந்தைகள் பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரத்தை கற்றுக் கொள்ளும் வாய்ப்பையும் பெருகின்றார்கள்.
தாத்தா பாட்டி குழந்தைகளுடன் நடைப்பயிற்சியில் ஈடுப்படுவது , அவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்பது, பாரம்பரிய உணவுகளை ஒன்றாக சமைத்து சாப்பிடுவது, அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வது போன்ற விடயங்களை செய்வது குழந்தைகளின் எதிர்காலத்தில் மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்குவதற்கு துணைப்புரிகின்றது.
குழந்தைகள் தாத்தா பாட்டியுடன் வளர்வதால் மத நெறிகளையும் கலாசார பின்னணியையும் எளிமையாக புரிந்துக்கொள்வதுடன் இலகுவாக பின்பற்றவும் ஆரம்பித்து விடுவார்கள். இது போன்ற பல நன்மைகள் குழந்தைகள் தாத்தா பாட்டியுடன் வளர்வதால் கிடைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |