தங்கத்தை காலில் அணிய கூடாதாம்.. ஏன் தெரியுமா? அறிவியல் உண்மை
பொதுவாகவே தங்கம் அனைவராலும் விரும்பப்படும் மற்றும் மதிக்கப்படும் ஒரு உலோகமான தங்கம் காணப்படுகின்றது.
இந்துக்களின் நம்பிக்கையின் படி மகாலட்சுமி மிகவும் விரும்பி தங்கும் இடங்களில் தங்கமும் ஒன்று.
எனவே தான் பெண்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு தங்க ஆபரணம் அணிந்திருக்க வேண்டும் என நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றார்கள்.
தங்க ஆபரணங்கள் உடலுக்கு ஒரு புனிதத் தன்மையையும் புத்துணர்ச்சியையும் தரக்கு கூடியது.
தங்க ஆபரணங்களை நம் உடலில் ஒவ்வோர் பகுதியிலும் அணிவதற்கு தனித்துவம் வாய்ந்த காரணங்கள் இருக்கின்றது. காரணம் இன்றி நமது முன்னோர்கள் எதையுமே சொல்லி வைகக்கவில்லை.
தங்கத்தில் கொலுசு அணிய வேண்டும் என நமக்கு ஆசை இருந்தாலும் தங்கத்தை காலில் அணியக்கூடாது என பெரியோர்கள் கூறுவார்கள் இதற்கு என்ன காரணம்?இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தங்கம் குறித்த நம்பிக்கையும் அறிவியலும்
தங்கத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிற காரணத்தால் அதை ஆபரணங்களாக கால்களில் அணியக் கூடாது.
கொலுசு, மெட்டி போன்றவற்றை வெள்ளியில்தான் அணிய வேண்டும் என கூறப்படுவதற்கு அறிவியல் ரீதியாக காரணம் இருக்கின்றது.
தங்க ஆபரணங்கள் அணிவது அழகுக்காக என்றே பெரும்பாலானவர்கள் நினைக்கின்றார்கள். ஆனால் உண்மையில் தங்க நகை அணிந்தால் நம் மனதில் தெளிவும் உறுதியும் இருக்கும்.
இயற்கையாகவே தங்கத்துக்கு உறுதித் தன்மை அதிகம். அது நம் உடலோடு ஓட்டி கிடப்பதால் நமக்கு மனபலம் உண்டாகும் .முற்காலத்தில் தங்கத்தில் ஆபரணங்கள் செய்யப்பட்மைக்கு இதுவே உண்மையான காரணம்.
தற்போது தங்கம் அணிவது கௌரமாகவும் பெருமையாகவும் கருதப்படும் அளவுக்கு நமது சமூகம் தள்ளப்பட்டுள்ளமைக்கு அறியாமையே காரணம் என்பது வருந்தத்தக்க உண்மை.
தங்கமானது தன்னம்பிக்கை உணர்வைத் தரும் சக்தி கொண்டது. நீங்கள் தங்க மோதிரம் அல்லது தங்க சங்கிலி அணிபவராக இருந்தால் நிச்சயமாக சில விஷயங்களில் உங்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்கும். இதை கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் தாலியை தங்கத்தில் செய்யும் மரபை உண்டாக்கினார்கள்.
தங்கத்தை லஷ்மியை போன்று பார்க்கும் காரணத்தால் தான் தங்கத்தை காலில் அணிவதற்கு அன்றைய காலத்து மக்கள் விரும்பவில்லை. மேலும் தங்கத்தை காலில் அணிந்தால் செல்வம் குறைந்துவிடும் எனவும் நம்பப்படுகின்றது.
ஆனால், காலில் தங்கம் இருந்தால் வாத நரம்புகள் தூண்டிவிடப்பட்டு உடலில் வீக்கமும் வலியும் ஏற்படுகிது என மருத்துவ சாஸ்திரம் கூறுகிறது. இதற்கு அறிவியல் ஆதாரங்களும் இருக்கின்றன.
அதனால் தான் நம் முன்னோர்கள் வாதத்தை கட்டுப்படுத்தி சமமாக வைக்கும் வெள்ளியை காலில் அணிந்து வந்தார்கள். இதுவே, காலில் தங்கம் அணியாதமைக்கு உண்மையான அறிவியல் ரீதியான காரணம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |