மின்மினி பூச்சி ஏன் ஒளிர்கிறது தெரியுமா? இதுதான் காரணம் தெரிஞ்சுக்கோங்க
பொதுவாக மின்மினி பூச்சிகள் வெயில் காலங்களில் வெளிப்புற இடங்களில் நிலா ஒளியில் ஒளிர்ந்து திரிவதை எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.
அப்போது இந்த மின்மினி பூச்சிகள் ஏன் இப்படி ஒளிர்கிறது என்பதை எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா? இந்த மின்மினி பூச்சிகள் ஒளிர்வதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
மின்மினி பூச்சிகள்
கோடை காலம் தொடங்கி விட்டால் மின்மினி பூச்சிகள் ஒளிரும் எனவே கோடை காலத்தை மின்மினி பூச்சிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
இதன் ஆயுள் காலம் 61 நாட்கள் இரண்டு மாதங்கள் மட்டுமே. இவை பூச்சியாக மாறும் நிலையில கோடைக்காலம் தொடங்கிவிடும். இந்தப்பூச்சிகள் இனச்சேர்க்கைக்காக இரவில் ஒளிர்கிறது.
இதுவே அதனின் முதன்மையான நோக்கமாக கருதப்படுகிறது. தனது துணையை ஈர்க்க அது தன்னை ஒளிர வைக்கிறது. இரவில் இதர உயிரினங்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் ஒளிர்வது இந்த பூச்சிக்கு உதவியாக இருக்கிறது.
இவைத்தவிர தங்களின் இரைகளை ஈர்க்கவும் மின்மினிப்பூச்சி ஒளிர்கிறது. மின்மினிப்பூச்சியில் வயிற்று பகுதியில் ஏற்படும் ஒருவித வேதியியல் மாற்றத்தினால் வெளிச்சம் உண்டாகிறது.
இந்த வேதியல் ஆக்சிஜன், கால்சியம் மற்றும் அடினோசின் ஆகியவற்றுடன் ப்ரோட்டின் லூசிஃபெரின் சேர்ந்து ஏற்படுத்தும் வேதியியல் ஆகும்.
இதனால் தான் வயிற்று பகுதியில் ஒரு விதமான ஒளி உண்டாகிறது. இவை பில்லுமினேஷ்ஸ் என்றும் அழைக்கப்படும்இதற்கு அர்த்தம் உயிரில் இருந்து வெளியாகும் வெளிச்சத்திற்கு இந்த பெயர் குறிப்பிடப்படுகிறது.