Jyothika: 45 வயதிலும் துள்ளலான இளமை! மாடர்ன் உடையில் ஜோதிகா வெளியிட்ட புகைப்படம்
நடிகை ஜோதிகா மாடர்ன் உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.
நடிகை ஜோதிகா
தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம்வரும் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் நடிப்பில் பிஸியாக இருந்து வருகின்றனர்.
சூர்யா ஜோதிகா இருவரும் காதலித்து 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
திருமணத்திற்கு பின்பு ஜோதிகா குடும்பத்தை மட்டும் கவனித்துக் கொண்டு நடிப்பில் இருந்து விலகி இருந்த நிலையில், தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்பு நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.
தற்போது ஜோதிகா தனது குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மாடர்ன் உடையில் இளமையாக ஜோதிகா
மும்பையில் செட்டில் ஆன ஜோதிகா பாலிவுட் படங்களில் நடித்து வருகின்றார். கடந்த வாரம் இவர் நடிப்பில் வெளியான சைத்தான் திரைப்படம் வசூலி்ல் உச்சத்திற்கு சென்றது.
தற்போது இரண்டு பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர், அவ்வப்போது தனது ஃபிட்டாக வைத்துக்கொள்ள தீவிரமாக உடற்பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றார்.
45 வயதாகும் ஜோதிகா மாடர்ன் உடையில் எடுத்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Neeya Naana: முன்ஜென்மத்தில் ஏற்பட்ட பாதிப்பு! தற்போதும் வலியால் அவதிப்படும் நபர்! சர்ச்சையில் கோபிநாத்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |