11 வருடங்களின் பின்னர் நடக்கும் அரிய நிகழ்வு! 2026 பிப்ரவரி மாத காலண்டரை கவனித்தீர்களா?
2026 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாத காலண்டர் தற்போது, சமூக வலைதளங்களில் "பெர்பெக்ட் பிப்ரவரி" என்று அழைக்கப்படுட்டு வகின்றது. காரணம் காலண்டரில் அமைந்துள்ள ஒரு அபூர்வமான ஒழுங்குமுறையாகும்.
இந்த வருட புதிய காலண்டரில் நீங்களும் இதை கவனித்தீர்களா? 2026 ஒரு லீப் ஆண்டு கிடையாது. எனவே, இந்த பிப்ரவரி மாதத்தில் சரியாக 28 நாட்கள் காணப்படுகின்றது.

28 என்பது 7-ஆல் சீராக வகுபடக்கூடிய எண்ணாக இருப்பதால், இம்மாதத்தில் மிகச்சரியாக நான்கு முழு வாரங்கள் அமைந்திருக்கின்றமை ஒரு விசேட அம்சமான அடையாளப் படுத்தப்படுகின்றது.
ஏன் இது ஸ்பெஷல்?
2026 பிப்ரவரி 1ஆம் திகதி ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பிப்பதுடன், பிப்ரவரி 28 ஆம் திகதி சனிக்கிழமை முடிகிறது. அதனால் 2026 பிப்ரவரி மாதம் ஒரு செவ்வக வடிவில் கச்சிதமாக பொருந்துகின்றது.

எந்த ஒரு நாளும் அடுத்த வாரத்தின் வரிசைக்குத் தள்ளப்படாமல், 4 வரிசைகளில் மிக அழகாகப் காட்சியளிக்கின்றது. மேலும் இந்த மாதத்தில் 4 ஞாயிறு, 4 திங்கள் என சனிக்கிழமை வரை அனைத்துக் கிழமைகளும் சரியாக 4 முறை மட்டுமே வருகின்றது.

இது போன்ற அரிய நிகழ்வு ஒவ்வொரு 6 அல்லது 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். இதற்கு முன்னர் 2015-ல் இது போன்ற ஒரு பிப்ரவரி மாதம் அமைந்தது என்பதும், இதற்கு அடுத்தபடியாக 2037ஆம் ஆண்டு தான் இதுபோன்ற 'பெர்பெக்ட் பிப்ரவரி' அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |