Escalator-ன் இரு முனையிலும் ஏன் பிரஷ்கள் காணப்படுகின்றன?
Escalatorகளில் நாம் அடிக்கடி ஏறி இறங்கி இருக்கின்றோம், இந்த Escalatorகளின் இரண்டு முனைகளிலும் பிரஷ்கள் காணப்படுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.
இது எதற்காக என்று எப்போதாவது சிந்தித்து இருக்கின்றீர்களா?
சில வேளைகளில் நீங்கள் உங்களுடைய பாதணிகளை அந்த பிரஷ்களில் சுத்தம் செய்திருக்கலாம், ஆனால் உண்மையில் அந்த தேவைக்காக இவ்வாறு பிரஷ்கள் இரு மருங்கிலும் பொருத்தப்படவில்லை.
தற்பொழுது அனைத்து Escalatorகளிலும் பிரஷ்கள் காணப்படுகின்றன. பொதுவாக நைலான் வகையிலான ப்ரஸ்களை நாம் அவதானிக்க முடிகிறது.

அசையும் படிகளில் எமது ஆடைகள் பாதணிகள் அல்லது பாதணி லேஸ்கள் என்பன சிக்கி விடாமல் இருப்பதற்காக இந்த பிரஷ்கள் காணப்படுகின்றன.
இரு மருங்கிலும் இவ்வாறு பிரஷகள் காணப்படுவதன் காரணமாக துணிகள் அல்லது நூல்கள் போன்றன இவற்றில் சிக்குவதனூடாக எவருக்கேனும் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்க்க முடிகின்றது.
இவ்வாறு பிரஷ்கள் காணப்படுவதனால் Escalatorரின் இரண்டு முனைகளும் தூய்மையாக காணப்படுகின்றது.

அதாவது இந்தப் பகுதிகளில் ஏதேனும் தூசி துகள்கள் தேங்கி நிற்பது தவிர்க்கப்படுகின்றது. இதனை ஒரு பாதுகாப்பு ஏற்பாடாகவும் குறிப்பிட முடியும்.
ஏனெனில் தூசி துகள்கள் படிய துவங்கினால் அவை வழுக்கும் தன்மையுடையதாக மாறக்கூடும்.
எனவும் இதனால் மக்கள் வழுக்கி விழக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Escalatorகளின் இரண்டு முனைகளிலும் காணப்படும் பிரஷ்கள் உண்மையில் பாதுகாப்பு நோக்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது மற்றும் அவை Escalatorகளை தூய்மையாக வைத்திருக்கவும் உதவுகின்றது.