தீபாவளிக்கு முன் இந்த வழிபாட்டைத் தவறவிடாதீர்கள்! ஜோதிடர் கூறும் எளிய பரிகாரம்
why early morning bath before 5 AM really important on Diwali? : தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் என கொண்டாட்டங்களுக்கு பஞ்சமிருக்காது. அதே நேரத்தில், இல்லத்தில் மகிழ்ச்சி நிலைக்கவும், லட்சுமி கடாட்சம் பெருகவும், செல்வ வளம் செழிக்கவும் பல்வேறு ஆன்மிக வழிபாட்டு முறைகளையும் நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர்.
அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு வரும் தன திரியோதசி நாளில் செய்ய வேண்டிய எளிய ஆன்மிக பரிகாரங்கள் குறித்து ஜோதிடர் சிம்மம் ரங்கநாதன் விளக்கியுள்ளார்.
தீபாவளிக்கு செல்வ வளம் பெருக..

அதன்படி, நவம்பர் 6-ம் தேதி மாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் வீட்டின் நிலைவாசலில் விளக்கேற்றி வழிபடுவது, அதிகாலை 5 மணிக்குள் கங்கா ஸ்நானம் செய்வது என இந்த நாளில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிபாட்டு முறைகளை அவர் எடுத்துரைத்துள்ளார்.
குறிப்பாக, வீட்டின் நிலைவாசலை இருட்டாக வைக்காமல் விளக்கேற்றி வழிபடுவது லட்சுமி தேவியின் அருளையும், குடும்பத்தில் செல்வ வளத்தையும் பெருக்கும் என்பது ஐதீகம்.
அப்படி தன திரியோதசி நாளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள் என்னென்ன? எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? இந்த வழிபாடுகளின் ஆன்மிக முக்கியத்துவம் என்ன? என்பது குறித்து ஜோதிடர் சிம்மம் ரங்கநாதன் அளித்துள்ள விளக்கங்களை விரிவாகப் இந்த காணொளி வாயிலாக பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |