கற்பூரம் ஏன் எளிதில் தீப்பிடிக்கிறது தெரியுமா? பலரும் அறியாத தகவல்!
பொதுவாக நாம் பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்களுள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருள் தான் கற்பூரம்.கற்பூரத்தில் இரண்டு வகைகள் காணப்படுகின்றது.
பச்சை கற்பூரம் மற்றும் வேதி கற்பூரம். பச்சை கற்பூரம் அனைத்து இனிப்பு பொருட்களுக்கு நறுமணம் சேர்க்கவும், ஆலய வழிபாட்டிற்கும் பயன்படுத்துகின்றனர். இந்த கற்பூரம் மெடிக்கா என்ற தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது.
இரச கற்பூரம்' என்னும் நச்சுப்பொருள் "கோல்தார்' என்னும் பொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதுவே வேதி கற்பூரம் அல்லது செயற்கை கற்பூரம் ஆகும்.
பெரும்பாலும் எந்த கலாசாரத்தை பின்பற்றுபவர்களாக இருந்தாலும் நிச்சயம் கற்பூரத்தை வாழ்வில் ஒரு முறையாவது பார்திருப்பார்கள்.
சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களையும் கூட கற்பூர புத்தி கொண்டவர்கள் என குறிப்பிடுவார்கள். காரணம் கற்பூரம் நெருப்பை நெருங்கும் போதே விரைவில் பற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் ஏன் கற்பூரம் இப்படி எளிதில் பற்றிக்கொள்கின்றது என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா? அதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் காரணத்தை விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
எளிதில் தீப்பிடிக என்ன காரணம்?
கற்பூரம் அதிக அளவு கார்பன் மற்றும் ஹைட்ரஜனால் ஆனது, இது மிகக் குறைந்த பற்றவைப்பு வெப்பநிலையை அளிக்கிறது. அதாவது கற்பூரம் தீப்பிடிக்க குறைந்தபட்ச வெப்பம் தாராளமாக போதுமானது.
மேலும், கற்பூரம் மிகவும் ஆவியாகும் தன்மை கொண்டது, மேலும் சிறிது சூடாக்கப்படும்போது, அது காற்றில் விரைவாகக் கலக்கும் நீராவிகளை வெளியிடுகிறது. இந்த நீராவிகள் ஆக்ஸிஜனுடன் தொடர்பு கொள்ளும்போது எளிதில் பற்றவைக்கின்றன, அதனால்தான் கற்பூரம் ஒரு தீப்பொறியுடன் மிக எளிதாக ஒளிரும் தன்மையை கொண்டுள்ளது.
கற்பூரத்தின் இந்த எரியும் தன்மை அதன் வேதியியல் அமைப்பில் இருந்து தான் உருவாகின்றது. இதில் நிறைய கார்பன் மற்றும் ஹைட்ரஜன் கூறுகள் காணப்படுகின்றமையால் கற்பூரமானது நெருப்பை முழுமையாக நெருங்கும் முன்னரே பற்றிக்கொள்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |