ஒரு மணி நேரத்திற்கு 60 நிமிடங்கள் இருக்க காரணம் என்ன?
ஒரு மணி நேரத்திற்கு 60 நிமிடங்கள் ஏன் இருக்கிறது என்பதற்கான காரணத்தை தற்போது விரிவாக பதவில் பார்க்கலாம்.
ஒரு மணி நேரத்திற்கு 60 நிமிடம்
பொதுவாக, நாம் அனைவரும் தினமும் நேரத்தை பார்த்து தான நமது அனைத்து வேலைகளையும் செய்கின்றாம். காலை எழுவது முதல் இரவு தூங்கச் செல்வது வரை என பெரும்பாலான நேரங்களில், பெரும்பாலான வேலைகளை நேரத்தை பார்த்து தான் செய்கிறோம்.
ஆனால் நாம் நேரத்தை பார்க்கும் போது ஒரு மணி நேரத்திற்கு 60 நிமிடங்கள் எதற்காக இருக்கிறது என்பதை யாராவது யோசித்து உள்ளீர்களா? இதற்கான காரணம் சுவாரஷயமானது.

ரூபாய்க்கு 100 பைசா, மீட்டருக்கு 100 சென்டிமீட்டர் என்று அனைத்தும் 100-ல் இருக்கும்போது நேரம் (Time) மட்டும் ஏன் 60-ல் (60 seconds / 60 Minutes) இருப்பதற்குக் காரணம் என்ன என்பது தற்போது பலரிடம் இருக்கும் ஒரு கேள்வி.
தற்போது நாம் பயன்படுத்துவது "தசம முறை" (Decimal System-Base 10) ஆகும். அதாவது, 10 விரல் விட்டு எண்ண 10 நம்பர் என்பது. ஆனால், 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சுமேரியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் "அறுபதும முறை" (Sexagesimal-Base 60) என்பதைத்தான் பயன்படுத்தினார்கள்.
அவர்கள் கண்டுபிடித்த Time Method தான் இது. அதைத்தான் நாம் தற்போது வரைக்கும் பின்பற்றி வருகிறோம்.

60-ஐ தேர்ந்தெடுப்பதற்கான காரணம் என்ன?
உதாரணமாக, எண் 10 , அதை 2 மற்றும் 5-ஆல் மட்டும்தான் முழுமையாக வகுக்க முடியும்.
ஆனால், 60 ஒரு மேஜிக் நம்பர் என்று தான் சொல்ல முடி. இதை 1, 2, 3, 4, 5, 6, 10, 12, 15, 20, 30 என்று 12 எண்களால் மீதியில்லாமல் வகுக்க முடியும். அதனால்தான் அரை மணி, கால் மணி, முக்கால் மணி போன்ற Time Divisions என்பதை எளிதாக கால்குலேட் செய்ய முடிகிறது.

லத்தீன் மொழியில், ஒரு மணிநேரத்தை முதலில் பிரிக்கும் பகுதிக்கு பெயர் "முதல் சிறிய பகுதி" (Pars Minuta Prima). அதுதான் Minute என்று சுருங்கிவிட்டது.
அந்த நிமிடத்தை மீண்டும் இரண்டாவதாக பிரிச்சதால் அதுக்குப் பெயர் "இரண்டாம் சிறிய பகுதி" (Pars Minuta Secunda) ஆகும். அதுதான் "Second" என்று அழைக்கப்படுகிறது. டைம் மட்டும் கிடையாது, வட்டத்தின் கோணம் 360 டிகிரியாக (6X6) இருப்பதற்கும் இதே பாபிலோனியர்கள்தான் காரணம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |