அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் நீல, பச்சை நிற ஆடை அணிவது ஏன்?
மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போது நீலம் மற்றும் பச்சை நிற ஆடை அணிவதற்கான காரணத்தினை தற்போது தெரிந்து கொள்வோம்.
உலகம் முழுவதும் மருத்துவர்கள் வெள்ளை நிற கோட் அணிவதை நாம் அவதானித்துள்ளோம். ஆனால் அதே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை அறைக்குள் மட்டும் நீலம், பச்சை நிற ஆடைகள் அணிந்து செல்கின்றனர்.
இதற்கான காரணத்தினை நாம் அவ்வளவாக தெரிந்து வைத்திருக்க மாட்டோம். இவ்வாறு அறுவை சிகிச்சைக்கு மட்டும் நீலம் மற்றும் பச்சை நிற உடைகள் எதற்கான அணிகின்றனர் என்பதை இன்னும் விரிவாக இங்கே தெரிந்துகொள்வோம்.

காரணம் என்ன?
இவ்வாறான உடையணிந்து செல்வதற்கு முக்கியமான காரணம் உள்ளது. அறுவை சிகிச்சை அறையில், விளக்குகள் மிகவும் பிரகாசமாகவே இருக்கும்.
ஏனென்றால் உடம்பில் உள்ள சிறிய உறுப்புகளைக் கூட தெளிவாக அவதானிக்க முடியும். ஆனால் இவ்வாறான விளக்கினை அவதானிக்கும் மருத்துவர்களின் கண்களுக்கு அதிகமான அழுத்தம் ஏற்படும்.
அவ்வாறான தருணத்தில் இந்த நீலம் மற்றும் பச்சை நிறத்தினை அவதானித்தால் அழுத்தம் குறைவதுடன், கண்களுக்கு இதமான உணர்வையும் கொடுக்கின்றது.
நீண்ட நேரம் ஒரே நிறத்தினை அவதானிக்கும் போது கண் சோர்வும் ஏற்படுகின்றது. நோயாளிகளின் சிவப்பு நிற ரத்தத்தினை அவதானிக்கும் போது After image effect என்று அழைக்கப்படும் சோர்வு அதிகமாகின்றது.

இதனால் கவனச்சிதறல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்படும். அத்தருணத்தில் சிவப்பு நிறத்திற்கு எதிரான நீலம் மற்றும் பச்சை நிறத்தினை அவதானிக்கும் போது கண்சோர்வு குறைவதுடன், கூடுதல் கவனமாக செயல்பட முடியுமாம்.
நோயாளிகளின் உடலில் ஒவ்வொரு நுணுக்கமான பகுதியை தெளிவாக அவதானிக்க முடியுமாம். இதனால் சிகிச்சையின் போது பிழைகள் ஏற்படுவது தவிர்க்கப்படுகின்றது.
அதுமட்டுமின்றி நோயாளிகளுக்கும் பயம், பதற்றம், நடுக்கம் இவற்றினை குறைக்கவும் செய்கின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |