தலை முடிக்கு எண்ணெய் வைக்க போறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க
தலை முடிக்கு எண்ணெய் வைக்கும் போது செய்யக்கூடாத தவறுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக தலைமுடியை பராமரிப்பதில் பெண்கள் அதிகமான கவனம் எடுத்துக் கொள்கின்றனர். குறிப்பாக தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய்யை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
அதாவது தலைமுடியை மென்மையாகவும், வறட்சியில்லாமல் வைப்பதற்கு தேங்காய் எண்ணெய் தடவுகின்றனர். ஆனால் எண்ணெய்யை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எவ்வளவு நேரம் வைத்திருக்க வேண்டும் என்று அவ்வளவாக தெரிவதில்லை.
இந்த பதிவில் தலைமுடிக்கு எண்ணெய் வைக்கும் செய்யக்கூடாத சில தவறுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

எண்ணெய் வைப்பதில் செய்யக்கூடாத தவறுகள் என்ன?
தலைமுடியை ஆரோக்கியமாக வைப்பதற்கு அதிகப்படியான எண்ணெய் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இவை முடியை பிசுபிசுப்பாக மாற்றிவிடுமாம்.
மேலும் இதனை சுத்தம் செய்வதற்கு கூடுதலாக ஷாம்பு பயன்படுத்த வேண்டியிருக்கும். இவ்வாறு நாம் பயன்படுத்தும் ஷாம்பு முடிக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

அதே போன்று தலைமுடியில் எண்ணெய் வைத்திருந்தால் அதிக நேரம் வைப்பது கூடாது. மேலும் இரவு முழுவதும் எண்ணெய் தலையுடன் இருப்பது வேண்டாம். ஏனெனில் வியர்வை, தூசி, அழுக்கு உச்சந்தலையில் எளிதாக படிந்துவிடுமாம்.
மேலும் பொடுகு தொல்லை, உச்சந்தலை தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படும். எண்ணெய் வைக்கும் அதிக அழுத்தத்துடன் தேய்ப்பதோ, மசாஜ் செய்வதோ கூடாது. விரல் நுனியை பயன்படுத்தி மெதுவாக மசாஜ் செய்யவும். நகத்தினை பயன்படுத்துவது கூடாது.

முடி சிக்கலாக இருக்கும் போது தலைக்கு அதிகப்படியான எண்ணெய் வைப்பது கூடாது. ஏனெனில் தலைமுடி உடைவது அதிகமாகிவிடுமாம்.
எண்ணெய் தடவுவது ஈரப்பதத்தினையும், மென்மையையும் அளிக்குமே தவிர, அதிகப்படியான முடி உதிர்வையும், கூந்தல் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு அளிக்காது. முடி உதிர்வு அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்..

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |