கோவிலில் மணி அடிப்பதன் ரகசியம் தெரியுமா? இது தெரிஞ்சா இனி கட்டாயம் பண்ணுவீங்க
பொதுவாக பெரும்பாலான கோயில்களில் மணி இருக்கும். அதை கோயிலுக்கு போகிறவர்கள் எல்லோரும் அடிகடகலாம். குறிப்பாக சிறுவர்க ளுக்கு கோயில் மணியை அடித்து விளையாடுவது என்றால் அலாதி இன்பம்.
கோவிலுக்கு செல்லும் போது பொதுவாகவே சாமியை தரிசனம் செய்யும் போது கோவில் மணியை அடிப்பது வழக்கம். ஆனால் எதற்காக கோவில் மணியை அடிக்கிறோம் என எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?
ஏன் கோவிலுக்கு சென்றால் மணி அடிக்க வேண்டும். இதற்கு பின்னால் மறைந்திருக்கும் அறிவியல் காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மணி அடிப்பது ஏன்?
கோவிலில் அடிக்கும் மணி ஓசைக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு இருப்பதாக இந்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நமர் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் கட்டாயம் துள்ளியமான அறிவியல் காரணம் இருக்கும்.
ஏன் கோவிலில் மணி இருக்கிறது என்று பெரியவர்களிடம் கேட்டால் அவர்கள் கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால், தங்களின் வேண்டுதலை கடவுள் காது கொடுத்து கேட்பார் என்று சொல்வார்கள்.
ஆனால் கோவிலில் மணி அடிப்பதற்கான அறிவியல் காரணம் என்னவென்றால் பொதுவாக கோவிலில் இருக்கும் மணியானது சாதாரண உலோகத்தால் செய்யப்படுவதுதில்லை.
இது காட்மியம், ஈயம், தாமிரம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட பல்வேறு உலோகங்களால் ஆனது.
கோவிலில் இருக்கும் மணியை அடிக்கும் போது அது கூர்மையான மற்றும் நீடித்த ஒலியை ஏற்படுத்துகிறது. சரியாக சொல்லபோனால் இந்த ஒளியானது 7 வினாடிகள் வரை நீடித்த ஒலியை எழுப்புகின்றது.
இந்த மணியில் இருந்து வரக்கூடிய ஒலியானது நமது உடலில் காணப்படும் 7 முக்கிய மையங்களில் தாக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாக நமது மூளையானது ஒருநிலைப்படுத்தப்படுகின்றது.
அதுமட்டுமில்லாமல் கோவிலில் மணி அடிக்கும் போது அதிலிருந்து வெளிவரும் ஓசையானது மனதில் இருக்கும் எதிர்மறையான எண்ணங்களை நீங்கி மன அழுத்தம் குறைகின்றது.
கோவிலில் மணி அடிப்பதால் நம் மனது அமைதி பெற்று நேர்மையான எண்ணங்களை சிந்திக்க செய்கிறது. இதனால் தான் கோவிலுக்கு செல்பவர்கள் மணி அடிக்கிறார்கள். இதுவே இதன் பின் இருக்கும் அறிவியல் காரணமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |