இறந்தவர்களின் மூக்கில் பஞ்சு வைக்க என்ன காரணம்னு தெரியுமா? அறிவியல் விளக்கம்
பொதுவாகவே இறந்தவர்களின் உடலை வீட்டுக்கு கொண்டுவரும் போது மருத்துவ ரீதியாகவும், மத ரீதியாகவும் சில வழிமுறைகள் பின்பற்றப்படுவது அவசியம்.
அப்படி இறந்தவர்களின் மூக்கு மற்றும் காதுகளில் பஞ்சு வைக்கப்படுவதும், நாடி கட்டிப்படுவது வழக்கம். இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்துள்ளீர்களா?
இது வெறுமனே மத நம்பிக்கைகளின் பிரகாரம் மட்டுமே செய்யப்படுகின்றதா?அல்லது இதற்கு பின்னால் அறிவியல் காரணங்கள் இருக்கின்றதா என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
அறிவியல் காரணங்கள்
இறந்தவர்களின் மூக்கில் பஞ்சு வைக்கப்படும் வழக்கம் அறிவியல் வளர்ச்சியற்ற காலங்களிலும் பயன்பாட்டில் இருந்துள்ளது. இதனை பெரும்பாலானவர்கள் மதசடங்காக நினைத்து செய்து வருகின்றார்கள்.
இதற்கான அறிவியல் காரணம், ஒருவர் இறந்ததுமே, அவரது உடலில் பாக்டீரியாக்களின் தாக்கமானது அதிகமாக இருக்கும். எனவே, அவர்களின் உடலிலிருந்து நுண்ணுயிர்கள் மூலம் சில வாயுக்கள் வெளிளும் வெளியேறும் இதனால் சுற்றுசூழல் மோசமாக பாதிக்கப்படும் என்பதன் காரணமாகவும் வெளியில் இருந்து நுண்ணுயிர்கள் உடலில் பரவாமல் இருக்கவும் மூக்கில் பஞ்சு வைக்கப்படுகிறது.
மேலும் இறந்தவர்களின் காதுகள் மற்றும் மூக்கில் இருந்து ஒரு திரவம் வெளியேறுகிறது. இந்த திரவத்தின் ஓட்டத்தை நிறுத்தவும் இவ்வாறு பஞ்சு வைத்து துளைகளை அடிக்கும் வழக்கம் காணப்படுகின்றது.
அதுமட்டுமன்றி நாடிகட்டு என்ற பெயரில் காதையும், வாயையும் சேர்த்து கட்டுவதாலும் மூக்கு மற்றும் காதுகளின் துளைகளை பஞ்சு வைத்து மூடுவதால், எந்த வகையான பாக்டீரியாவும் உடலில் நுழையாமல் தடுக்க முடிகின்றது.
இறந்தவர்களின் அருகில் இருப்பவர்களுக்கு இதனால் நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் குறைகின்றது.அதிலும் நோய்வாய்ப்பட்டு இறந்திருந்தால், காற்று உட்புகுந்து உடலை மேலும் கெட்டுவிடாமல் இருப்பதற்காகவே, கால் கட்டைவிரல்களை சேர்த்து கட்டுவார்கள். உடலில் இப்படி 7 இடங்களில் கட்டும் வழக்கம் காணப்படுகின்றது.
இறந்தவர்கள் வீட்டுக்கு சென்று வந்தால், குளிக்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுவதற்கும் நோய்கிருமிகளில் இருந்து பாதுகாப்பு பெறவேண்டும் என்பதே முக்கிய காரணமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |