பாம்புகள் ஏன் பாம்பையே சாப்பிடுகிறது தெரியுமா?அதற்கு பின்னால் மறைந்திருக்கும் உண்மை
உலகின் மிக ஆபத்தானதும், மக்கள் அதிகம் வெறுக்கப்படும் மிருகங்களில் ஒன்று தான் பாம்புகள்.
இவை பார்ப்பதற்கு அறுவறுப்பான தோற்றத்திலும் விஷத்தன்மமை கொண்டதாகவும் இருக்கும். இந்த பாம்புகள் மற்ற பாம்புகளை சாப்பிடும் பழக்கமாக வைத்துள்ளது. இதனை ஓபியோபாகி என்கிறார்கள்.
இந்த வித்தியாசமான நடத்தைக்கு பின்னால் இருப்பது என்ன என்பதனை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பீர்கள். தன் இனத்தையே சாப்பிடும் பழக்கம் எல்லா பாம்புகளிடமும் இருக்காது.
மாறாக கிங் கோப்ரா என அழைக்கப்படும் பாம்புகளுக்கு மட்டுமே இப்படியான குணங்கள் இருக்கும். இதனால் இந்த பாம்புகளை கிங் கோப்ராக்களை "பாம்பு உண்பவர்" எனவும் அழைக்கிறார்கள்.
இந்த வகை பாம்புகள் இந்தியா, தெற்கு சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றன. இதில் க்ரைட்ஸ் மற்றும் பிற நாகப்பாம்புகள் போன்ற விஷ இனங்கள் அடங்கும்.
அந்த வகையில் இப்படி பாம்புகளை சாப்பிடும் பாம்புகள் பற்றி மேலதிக தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
நரமாமிசம் சாப்பிடும் பழக்கம் கொண்ட பாம்புகள்
1. நரமாமிசம் சாப்பிடும் பழக்கம் கொண்ட பாம்புகள் தன் இனத்தை கூட பாராமல் இப்படி பாம்புகளை பிடித்து உண்கிறது. உணவுப் பற்றாக்குறை, மன அழுத்தம் மற்றும் பிராந்திய மோதல்கள் உள்ளிட்ட பல காரணங்களால் இது நிகழலாம்.
2. ஆப்பிரிக்க ராக் பைதான் உலகின் மிகப்பெரிய, கொடிய பாம்பு இனத்தை சார்ந்தது. இது 20 அடிக்கு மேல் வளரும். அந்த பாம்புகளின் வலிமை மற்ற பெரிய பாம்புகளை அடக்கி சாப்பிடும் அளவிற்கு இருக்கும்.
3. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாம்புகள் இப்படி தன்னுடன் இருக்கும் பாம்பையே பிடித்து உண்ணும்.
4. பாம்புகள் பல சந்தரப்பங்களில் சிறைபிடிக்கும் நிலை ஏற்படும். அந்த சமயத்தில் பாம்புகள் மத்தியில் நெரிச்சல் இருக்கும். இந்த பொருத்தமற்ற சூழ்நிலையில் வைக்கப்பட்டால் அவை ஒன்றையொன்று உண்ணும்.
5. பாம்பினங்கள் சில சமயங்கள் கொடி விஷம் கொண்ட பாம்புகளையே சாப்பிட்டு விடலாம். இதனால் சூழலில் காணப்படும் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்புகளின் எண்ணிக்கை குறையும்.
6. ஓரோபோரோஸ் என அழைக்கப்படும் பாம்பு அதன் வாலையே சாப்பிடும். இதனை பழங்கால சின்னம், வாழ்க்கை, இறப்பு மற்றும் மறுபிறப்பு சுழற்சியைக் குறிக்கிறது என வைத்திருந்தார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |