Viral video: புதிதாக பிறந்த யானைக்குட்டி நடப்பதை பார்த்துள்ளீர்களா? மெய்சிலிர்க்கும் காணொளி
புதிதாக பிறந்த யானைக்கன்று ஒன்று தன் தாயின் பின்னால் தட்டு தடுமாறி நடந்து செல்லும் வீடியோ தற்போது இணையதளவாசிகளை ஈர்த்து வருகின்றது.
வைரல் வீடியோ
சமூக வலைத்தள பக்கத்தில் பல வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நம் மனதை மாற்றி இருக்கும். பொதுவாக இப்போது மனிதர்களை விட மிருகங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையும் நமக்கு ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.
இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது தன் தாயுடன் ஒரு குட்டி யானை நடந்து செல்லும் அந்த அழகை தான். யானைகள் சமூகமாக வாழும் ஒரு விலங்கு. யானைகள் மிகவும் நுண்ணுணர்வு மிக்கவை.
மனிதர்களின் கர்ப்ப காலம் 10 மாதங்கள் என்றால், யானைகளின் கர்ப்ப காலம் 22 மாதங்கள். புதியதாக பிறந்த ஒரு யானைக் கன்று 90-115 கிலோ எடை இருக்கும். யானைக் குட்டிகள் பார்க்கவே அழகாக சுட்டியாக குறும்புத்தனமாக இருக்கும்.
புதியதாகப் பிறந்த ஒரு யானைக் கன்று, தாய் யானையின் பின்னால், தத்தி தடுமாறி விழுந்து நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Just born and started walking. Not able to walk properly though, but one day he will walk and earth will shake. pic.twitter.com/3E7rvHnc07
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) August 22, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |