குழந்தையின் கண்களில் மை வைப்பது ஏன்? இது பாதுகாப்பானதா?
குழந்தையின் கண்களில் கண்மை வைப்பது ஒரு பாரம்பரிய கலாச்சாரமாக தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றது.
இது தீய கண் பார்வைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் என்றும் எதிர்மறை ஆற்றல்களை குழந்தைகளிடமிருந்து அகற்றும் எனவும் நம்பப்படுகிறது.
ஆனால் இவ்வாறு குழந்தையின் கண்களில் மை வைப்பது ஆபத்தானதா? அல்லது பயன்படுத்தலாமா என்பது பற்றிய தெளிவு பலரிடம் இருப்பதில்லை.
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கண்களை பெரிதாகவும் அழகாகவும் காட்ட கண்மை பயன்படுத்துகின்றனர். இது மருத்துவ ரீதியில் ஆபத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு பயன்படுத்தலாமா?
சுர்மா அல்லது கண் மை என்றும் அழைக்கப்படும் காஜல், இந்தியா, பாகிஸ்தான், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் பொதுவாக கண் பராமரிப்புப் பொருளாகவும், அழகுசாதனப் பொருளாகவும் தொன்று தொட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
ஆனால் குழந்தைகளுக்கு காஜலைப் பயன்படுத்துவது மருத்துவ ரிதியில் பாதுகாப்பானதா என கேட்டால் நிச்சயம் இல்லை. காரணம் குழந்தைகளின் கண்கள் மிகவும் மென்மையானவை, அவர்களின் கண்ணுக்க மை வைப்பதால், அவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
காஜலைப் பயன்படுத்துவதால் கண்களில் நீர் வடிதல், அரிப்பு மற்றும் ஒவ்வாமை கூட ஏற்படலாம். கடையில் வாங்கப்படும் காஜல் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் காரணமாக குழந்தைகளின் கண் பார்வையில் கூட பாதிப்பு ஏற்படடும் அபாயம் காணப்படுகின்றது.
பல கலாச்சாரங்களில் கண்மை வைப்பது குழந்தைக்கு நன்மை பயக்கும் என்று நம்பினாலும், மருத்துவர்கள் இதை ஏற்கவில்லை. அது குழந்தைகளின் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கண்மையில் ஈயம் உள்ளது, இது கண்களில் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தொற்றுநோய்களுக்கும் வழிவகுக்கும். உண்மையில், கடையில் வாங்கப்படும் காஜல்களில் பெரும்பாலானவை ஈயத்தால் நிரப்பப்பட்டிருக்கும், இது உங்கள் குழந்தைக்கு நிச்சயம் பாதுகாப்பற்றது.
அப்படியும் குழந்கைகளுக்கு கண் மை பயன்படுத்த விரும்பினால், வீட்டில் தயாரித்த கண் மையினை பயன்படுத்த வேண்டும். ஆனால் கண் மருத்துவர்கள் அனைவரும் பெற்றோரிடம் உங்கள் குழந்தைகளுக்கு கண் மை பயன்படுத்த வேண்டாம் என்றே அறிவுறுத்துகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
