நிலத்திற்கு அடியில் வீடு கட்டி வாழும் மக்கள்: என்ன காரணம்?
வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் அரபு மொழி பேசும் மக்கள் நிலத்திற்கு அடியில் தங்களுக்கான வீட்டை கட்டி வாழ்கின்றனர்.
மட்மதா
துனிசியாவில் சிறிய நகரம் ஒன்று உள்ளது. இதற்கு மட்மதா என்று பெயர். தெற்கு துனிசியாவின் டிஜெபல் தஹார் பிராந்தியத்தின் வறண்ட பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ள நிலப்பரப்பில் இந்த நகரம் அமைந்துள்ளது.
பண்டய காலங்களில் போர் சமயங்களில் மறைந்திருப்பதற்காக ராஜ தந்திரிகள் மற்றும் ராஜாக்கள்; சாதாரண மக்கள் போன்றோர் பதுங்கு குழிகள், ரகசிய அறைகள், சுரங்க பாதைகள், நிலத்தடி அறைகள் எல்லாம் பயன்னடுத்தினார்கள் என வரலாற்று புத்தகங்களிலும் செய்திகளிலும் அறிந்திருப்போம்.
ஆனால் ஒரு தென்னாபிரிக்க நகரமே நிலத்திற்குள் தான் இருக்கிறது . இந்த நகரம் நிரத்திற்கு அடியில் இருப்பதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்கலாம்.
இந்த நில அடி நகரமானது டிஜெபல் தஹார் பிராந்தியத்தின் வறண்ட பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ள நிலப்பரப்பில் இந்த நகரம் அமைந்துள்ளது. ஸ்டார் வார்ஸ் படப்பிடிப்பு இந்த துனிசியாவின் மட்மதா நகரத்தில் தான் செய்யப்பட்டது.
ஆனால் இப்போது இந்த பாரம்பரிய கட்டமைப்புகள் கொண்ட நகரத்தில் வசிக்கும் மக்கள் வெளியேறி வருகின்றனர். பெர்பர் இன மக்கள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர்.
அவர்கள் அரேபியாவில் இருந்து துனிசியா நாட்டிற்கு குடிபெயர்ந்த போது மட்மதாவில் உள்ள வறண்ட நிலத்தில் வெப்பத்தில் வாழ முடியாத காரணத்தால் இங்குள்ள நிலத்தின் அடியில் மண்ணை தோண்டி வாழ்ந்தனர்.
எளிய கைக்கருவிகளுடன் தோண்டக்கூடிய அளவுக்கு மென்மையாக இருக்கும் மணற்கல்லில் முதலில் ஆழமான வட்டக் குழியைத் தோண்டி வீடுகள் கட்டுகின்றனர்.
குகையின் விளிம்புகளைச் சுற்றி தோண்டப்பட்டு, நிலத்தடி அறைகளை உருவாக்கி வீட்டின் அமைப்பை கொண்டு வருகின்றனர்.
இந்த தனித்துவமான கட்டுமானமானது பகலில் வெப்பத்திலிருந்து தப்பிக்க உதவியுள்ளது .
ஆனால் 1960 களில் பெய்த கனமழை, வெள்ளத்தில் நிலத்தடி குடியிருப்புகள் கொஞ்சம் சேதமடைந்துள்ளது . இருப்பினும் இன்றைய சூழலில் இந்த வீடுகள் அனைத்து நவீன வசதிகளுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டில் ஒவ்வொரு கொல்லைப்புறமும் ஒரு முற்றத்துடன் இணைகிறது. நிலத்தடி வீட்டிற்கு இந்த முற்றம் மூலமாகத்தான் வெளியில் இருந்து காற்றைக் கொண்டுவருகிறது. குடும்ப உறுப்பினர்கள் வேலைகளைச் செய்வதற்கும் சமூக ரீதியாக இணைவதற்கும் இது ஒரு மைய இடமாகும்.
மட்மதா சுரங்க வீடுகளில் இருந்து சுவரில் பதிக்கப்பட்ட கால் வைக்ககூடிய படி போன்ற அமைப்பை கொண்டு நிலப்பரப்பை அடைகின்றனர்.
துனிசியா ஜனாதிபதி ஹபீப் போர்குய்பா நாட்டை நவீனமயமாக்க முயன்ற போது இந்த நகரமும் அங்குள்ள பெர்பர் மக்களும் பல புதிய வசதிகளை பெற்றனர்.