கற்களை சாப்பிடும் தீக்கோழிகள் ! எதுக்காக தெரியுமா?
தீக்கோழிகள் ஆப்பிரிக்க சவன்னாவில் காணப்படும் தனித்துவமான தோற்றமுடைய பறவையினமாக அறியப்படுகின்றது.
அவை மிக வேகமாக ஓடுவதுடன் உலகின் மிகப்பெரிய பறவையாகும் திகழ்கிறது. இது 8 அடி வரை உயரமாக வளரக்கூடியது.
பறவையாக இருந்தும் பறக்கத்தெரியாத தீக்கோழி அதனுடைய கூட்டில் 100 முட்டைகளுக்கு மேல் இடுகின்றன.
அதனுடைய ஒவ்வொரு முட்டையும் சுமார் ஆறு அங்குள்ள நீளமும் 15 முதல் 18 அங்குல சுற்றளவும் கொண்டுள்ளது.
நெருப்பு கோழியால் தொடர்ந்து 45 நிமிடங்கள்வரையில் ஒரே வேகத்தில் ஓட முடியும். ஒரு மாத வயதுள்ள நெருப்புக்கோழி மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது.
தீக்கோழிகள் ஏன் கற்களை சாப்பிடுகின்றது?
தீக்கோழிகள் கற்களை சாப்பிடுவதை அனைவருமே பார்த்திருப்பார்கள். ஆனால் அவை ஏன் கற்களை சாப்பிடுகின்றது என எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா? அதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் என்ன என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
தீக்கோழிகளுக்கு பற்கள் கிடையாது. இவை செரிமானத்தை எளிதாக்குவதற்காக கற்களை விழுங்குகின்றது.
அதற்கு பற்கள் இல்லாததால், அவற்றால் உணவை நன்கு மென்று துண்டாக்கி செரிக்க முடியாது. எனவே, இவை உணவை வயிற்றுக்குள் உணவை நன்றாக அரைக்க வேண்டும் என்பதற்காக கற்களை சாப்பிடுகின்றது.
இந்த கற்கள் தசைப்பையில் (gizzard) தங்கி, உட்கொள்ளும் உணவை அரைத்து உடைக்க பெரிதும் துணைப்புரிகின்றது. அதனால் அதன் செரிமானம் எளிதாகின்றது.
தீக்கோழைிகள் மட்டுமன்றி சில பறவைகளும் கோழிகளும் கூட செரிமானத்துக்காக கற்களை சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.