கொசுக்கள் சிலரை மட்டும் ஏன் அதிகமாக கடிக்கின்றது தெரியுமா?
கொசுக்கள் சில நேரங்களில் ஒரு சிலரை மட்டும் அதிகமாக கடிப்பதற்கு காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மழைக்காலம் மற்றும் குளிர்காலம் வந்துவிட்டாலே வீட்டில் கொசு தொல்லை அதிகமாக இருக்கும்.
கொசுவால் தான் பல வகையான வைரஸ் காய்ச்சல் மனிதர்களை எளிதாக தாக்கி விடுகின்றது. அதிலும் கொசுக்கள் ஒரு சிலரை மட்டும் அதிகமாக கடிப்பதற்கு காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
ரத்த வகை
கொசுக்களுக்கு ஓ ரத்த பிரிவு மனிதர்களை அதிகமாக கடிக்குமாம். அதாவது மற்றவர்களுக்கு ஒருமுறை கடித்தால், குறித்த ரத்த வகை நபர்களுக்கு மட்டும் இரண்டு முறை கடிக்குமாம்.
மேலும், கொசுக் கடிப்பது நாம் உருவாக்கும் சுரப்புகளுடன் தொடர்புடையது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
யாரை அதிகமாக கடிக்கும்?
கார்பன் டை ஆக்ஸைடை எந்த நபரின் உடல் அதிகமாக வெளியிடுகின்றதோ, அவர்களை கடிக்குமாம். ஏனெனில் கார்பன் டை ஆக்ஸைடு கொசுக்களுக்கு விருப்பமான விடயமாகும். மேலும் இந்த நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி போன்ற மற்ற சக்திகள் அதிகமாக இருக்கும்.
கொசு கடிப்பதற்கு முன்பு தரையில் அமர்ந்து உங்களை உற்று நோக்கி, கண்காணித்த பின்பே கடிக்குமாம். கொசுவின் கண்களுக்கு அடர் நிறங்கள் தான் முதலில் தெரியுமாம். கருப்பு நிற உடையணிந்திருப்பவர்களை கொசு அதிகமாக கடிக்கும். கொசுக்களின் கண்களுக்கு வெளிர் நிறங்கள் அவ்வளவு எளிதில் தெரியாது என்றும் ஆய்வில் அறியப்பட்டுள்ளது.
வெப்பநிலை அதிகம் கொண்ட உடல்களை கொசுக்களுக்கு அதிகமாக பிடிக்கும். ஏனெனில் இவர்களின் ரத்தம் அடர்த்தி அதிகமாக இருக்கும் என்பதால், அதிகமாகவே கடிக்குமாம்.
மது அருந்துவர்களையும் கொசுக்கள் அதிகமாகவே கடிக்குமாம். அதிலும் கொசுக்களுக்கு பீர் குடிப்பவர்கள் கொசுக்களை அதிகமாக ஈர்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |