வால் மிளகு அதிகம் சேர்த்தால் இவ்வளவு பிரச்சனையா?
வால் மிளகு என்பது இருவித்திலை தாவரமாகும். மிளகின் அடிப்பகுதியில் வால் போன்ற நீட்சியை கொண்டிருப்பதால் வால் மிளகு என அழைக்கப்படுகிறது.
வால்மிளகு மரத்தில் படர்ந்து வளரும் பருவக் கொடித் தாவரம். இந்த தாவரம் ஜாவா, தாய்லாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவு போன்ற இடங்களில் பயிர் செய்யப்படுகின்றன. இது காரமும், சற்று கசப்பு சுவை கொண்டதாகவும் இருக்கிறது.
சித்த மருத்துவத்தின் படி, வால் மிளகு அதிகமாக பயன்படுத்துவதால் உடலில் நிறைய ஆரோக்கிய பிரச்சினை ஏற்படும்.
அந்த வகையில், வால் மிளகினால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பக்க விளைவுகள்
1. வால் மிளகு காரத்துடன் கூடிய வலுவான சுவை கொண்டுள்ளவை. இதனை அதிக அளவு உட்க் கொள்ளும் பொழுது வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியுடன் கூடிய பக்க விளைவுகள் அதிகமாக இருக்கும்.
2. வால் மிளகு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தக்கூடியது. வயிற்று புண் மற்றும் வயிற்று எரிச்சல் உள்ளவர்கள் வால் மிளகை முற்றாக தவிர்க்க வேண்டும். அத்துடன் வயிற்று எரிச்சல் உள்ளவர்கள் எடுத்து கொள்வதால் அவர்களுக்கு தொடர் வயிற்று வலியும் ஏற்படலாம்.
3. வால் மிளகு ஆண்மை குறைவு பிரச்சனையை சரிச் செய்யும். இதனால் ஆண்கள் வால் மிளகை அடிக்கடி உட்க் கொள்வார்கள். அளவுக்கு அதிகமாக வால் மிளகு உட்க் கொண்டால் அது ஆண்களுக்கு வேறுவிதமான ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
4. வால் மிளகினை குறைந்த அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
5. வயதானவர்கள், வால் மிளகினை அதிகமாக எடுத்துக்கொண்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற விளைவுகள் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |