இந்தியர்கள் பால் கலந்து தேனீர் குடிக்க காரணம் என்ன?
டீ குடிப்பது எல்லோருக்கும் பழக்கபட்ட விடயம். அந்த டீயில் இந்தியர்கள் பால் கலந்து குடிப்பது அதிகம். இந்த பழக்கத்திற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பால் கலந்த தேனீர்
எலகில் பெரும்பாலான பகுதிகளில் தேனீர் பருகுவதை தங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே மாற்றி உள்ளனர். பொதுவாக தேனீர் தேயிலையை தண்ணீரில் ஊறவைத்து, அதில் சக்கரை எலுமிச்சை அல்லது பால் சேர்த்து விருப்பத்திற்கு ஏற்றவாறு பருகுவார்கள்.
ஆனால் இந்தியாவில் மட்டும்தான் தேநீர் பருகுவது ஒரு அடிமை பழக்கமாக மாற்றி வைத்துள்ளனர். போர் அடித்தால் டீ கோபம் வந்தால் டீ மன உளைச்சல் வந்தா டீ கவலையாக இருந்தா டீ தலை வலித்தால் டீ இப்படி டீயை ஒரு பாட்னராகவே மாற்றி இந்திய மக்கள் வைத்துள்ளனர்.
இங்கு ரயில் நிலையங்கள் முதல் சாலையோரக் கடைகள் வரை, தேநீர் விற்கும் இடங்களையும் அங்கு மக்கள் நின்று தேனீர் குடித்து தங்கள் ஊர் கதை வீட்டுகதை பேசுவதையும் காணலாம்.

அதேசமயம் இந்தியாவில் மட்டும் ஏன் தேநீரில் பால் கலந்து குடிக்கிறார்கள்? இதற்கு என்ன காரணம்? உன யாராவது யோசித்துள்ளீர்களா?தேயிலை இந்தியாவிற்கு உரித்தான பயிர் இல்லை ஆனால் அது பயிரிடப்பட்டது இந்தியாவில் தான்.
19-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம், பானங்களின் மீதான சீனாவின் ஏகபோகத்தை முறியடிக்க பெரிய அளவிலான தேயிலை சாகுபடியை அறிமுகப்படுத்தியது.
ஆரம்பத்தில் தேநீர் ஏற்றுமதி மற்றும் உயர்குலத்தோருக்கான உணவுப் பொருட்களுக்காகவே இருந்தது. ஆனால் காலப்போக்கில் இந்தியர்களும் டீ குடிக்கும் பழக்கத்தை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டனர்.

இந்திய சமையலறைகளில் பால் என்பது ஊட்டச்சத்து, தூய்மை மற்றும் பாரம்பரியம் நிறைந்த ஒரு பொருளாக காணப்பட்டது.
பாலில் உள்ள கிரீமியான உணர்வும் இயற்கையான இனிப்பும் மசாலாப் பொருட்கள், ஏலக்காய் மற்றும் இஞ்சியுடன் சரியாகப் பொருந்தி, ஒரே நேரத்தில் இனிமையான மற்றும் உற்சாகமளிக்கும் ஒரு பானமாக மாறியது.
நாளடைவில் ரொட்டிகள் மற்றும் சிற்றுண்டிகளுடன் டீ சேர்த்து சாப்பிடப்பட்டது. வீடுகளில் தினசரி சடங்குகளில் ஒன்றாக இந்த டீ இருந்தது.
இந்தியாவின் சிறிய நகரங்கள் மற்றும் சந்தைகளில் கூட தேநீர் பரவியதால், ஒவ்வொரு பிராந்தியமும் அதன் சொந்த ருசியைச் சேர்த்தது. அரவணைப்புக்கு இஞ்சி, நறுமணத்திற்கு ஏலக்காய், உந்துதலுக்கு கிராம்பு, ஆழத்திற்கு இலவங்கப்பட்டை என சொல்லிக்கொண்டே போகலாம்.

உலகின் பிற பகுதிகளில் தேனீரில் ஏன் பால் சேர்ப்பதில்லை
தேயிலை தோன்றியது சீனா மற்றும் ஜப்பானில் தான். இதனால் தூய்மைக்கு மதிப்பு அளிக்கப்படும் விதமாக அதன் இலையின் மீதும், நறுமணத்தின் மீதும், கவனம் செலுத்தப்படுகிறது.
ஆனால் ஆங்கிலேயர்களும் டீயில் பால் சேர்க்கிறார்கள். ஆனால் கொஞ்சமாக மட்டுமே சேர்க்கிறார்கள். பாலில் உள்ள புரதங்கள் தேநீரின் துவர்ப்பை மென்மையாக்கி, சுவையை மென்மையாக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இதன் காரணமாக இந்த டீயில் இஞ்சி மற்றும் ஏலக்காய் போன்ற மசாலாப் பொருட்களைச் சேர்க்கும் போது சுவை மட்டுமல்ல, சிறந்த செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி கூட கிடைக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |