ஒட்டகங்களுக்கு ஏன் உயிருள்ள விஷப் பாம்புகள் உணவாக கொடுக்கப்படுகிறது? பலரும் அறியாத தகவல்
சில பிரதேசங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய நடைமுறையில் ஒன்றாக திகழும் திகழும் விடயம் தான் ஒட்டகங்களுக்கு உயிருள்ள பாம்புகள் உணவாக கொடுக்கப்படுவது.
ஆனால் இந்த அசாதாரண உணவு முறை பாரம்பரிய மருத்துவத்துடன் தொடர்புப்பட்டதாக நம்பப்படுகிறது.
காரணத் பாம்புகளை உட்கொள்வது ஒட்டகங்களின் சில நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது.
பொதுவாக ஒட்டகம் இலைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணும். அதன் உணவு முறையில் பாம்புகள் ஒருபோதும் இடம்பெறுவது கிடையாது. ஆனால் சில சூழ்நிலைகளில் ஒட்டகங்களுக்கு பாம்புகள் உணவாக கெடுக்கப்படுகின்றது.
என்ன காரணம்?
ஹைம் நோயால் பாதிக்கப்பட்ட ஒட்டகத்திற்கு அதன் வாயைத் திறந்து பாம்பைச் செருகுவதன் மூலம் ஒட்டகங்களுக்கு பாம்புகள் உணவாக கொடுக்கப்படுகின்றது.
இந்த நோய் காரணமாக ஒட்டகம் உணவு சாப்பிடுவதையும் தண்ணீரை அருந்துவதையும் முழுமையாக நிறுத்திவிடுகின்றது.
மேற்கு ஆசிய நாடுகளில், ஹைம் நோயால் பாதிக்கப்பட்ட ஒட்டகங்களுக்கு பாம்புகளை சாப்பிட கொடுப்பதால் அவை குணமாகும் என்று நம்பப்படுகிறது.
பாம்பிலிருந்து வரும் விஷம் ஒட்டகத்திற்கு ஆன்டிபாடிகளை உருவாக்கி, நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.
பாம்பை உண்பதால் அதன் விஷம் ஒட்டகத்தின் உடலில் பரவி நோயின் பாதிப்பிலிருந்து ஒட்டகத்தை குணப்படுத்துகிறது.
பாம்பு விஷத்தின் தாக்கம் நீங்கிய பிறகு, ஒட்டகம் மீண்டும் முற்றிலும் ஆரோக்கியம் அடைகின்றது. அதன் காரணமாகவே இந்த விசித்திரமான நடைடுறை பின்பற்றப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |