கூந்தல் காடு மாதிரி வளரணுமா? அப்போ வாரம் ஒரு முறை இந்த சட்னியை தவறாமல் சாப்பிடுங்க
பொதுவாகவே எல்லா உணவுளிலும் கறிவேப்பிலை இடம்பிடித்துவிடும்.மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் இந்த கறிவேப்பிலையில் ஏராளமாக மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.
கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, மற்றும் விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் இ, போன்ற சத்துகளும் விட்டமின்களும் நிறைந்து காணப்படுகிறது.
கறிவேப்பிலையை தினசரி உணலில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியம் சீராக இருக்க உதவுகிறது. மேலும் உங்கள் உடலில் உள்ள தொற்றுக்கு எதிராகவும் போராடுகிறது.
குறிப்பாக கறிவேப்பிலை கூந்தல் சம்பந்தப்பட்ட சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுப்பதுடன் கூந்தல் வளர்ச்சியையும் துரிதப்படுத்தும்.
இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட கறிவேப்பிலையை வைத்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் எவ்வாறு சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை -1 கப்
உளுந்தம்பருப்பு-2 தே.கரண்டி
கடலைப்பருப்பு -1தே.கரண்டி
வரமிளகாய்-4
புளி -சிறிதளவு
எண்ணெய் -2 தே.கரண்டி
தேங்காய் -அரை கப்
பெருங்காயம் -சிறிதளவு
தண்ணீர்- தேவையான அளவு
தாளிக்க தேவையானவை
எண்ணெய்-அரை தே.கரண்டி
கடுகு-1 தே.கரண்டி
செய்முறை
முதலில் கறிவேப்பிலையை நன்றாக சுத்தம் செய்து கழுவி விட்டு, ஒரு துணியில் நன்கு பரப்பிவிட்டு காயவிட வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வரையில் நன்றாக வதக்கி,அதனுடன் பெருங்காயத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பருப்பு நன்றாக வெளிர் பொன்னிறமாக மாறியதும், வரமிளகாயைச் சேர்த்து, இரண்டு பருப்பும் நன்கு பொன்னிறமாக மாறும் வரையில் வறுத்து, மிளகாய் சேர்த்து மிருதுவாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பை அணைத்து விட்டு கறிவேப்பிலை மற்றும் புளி சேர்க்கவும். கறிவேப்பிலை கடாயின் சூட்டில் சுருங்கும், இந்த கலவையை நன்கு ஆறவிட வேண்டும்.
நன்றாக ஆரியதும் இந்த கலவையை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு, தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பான பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் தேவையான அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகை போட்டு தாளித்து, தாளிப்பை சட்னி மீது ஊற்றி கலந்துவிட்டால் அவ்வளவு தான் அருமையான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த கறிவேப்பிலை சட்னி தயார்.
இந்த சட்னியை வாரம் ஒரு முறை சாப்பிட்டால், கூந்தல் உதிர்வு கட்டுப்படுத்தப்படுவதுடன் கூந்தல் கருமையாகவும் அடத்தியாகவும் மாற ஆரம்பிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |