இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே.. பறவைக் கூட்டம் V வடிவத்தில் ஏன் பறக்கிறது தெரியுமா?
பொதுவாக நாம் தினமும் பார்த்து மகிழும் இயற்கையில் நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத பலஆச்சர்யமான விடயங்கள் உள்ளன.
இந்த உலகில் வாழும் எந்தவொரு உயிரினமாக இருந்தாலும், அதற்கான தனித்துவமான பண்புகள் உள்ளன. அதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணமும் உள்ளது.
உலகின் சமநிலையைக் கடைப்பிடிப்பதிலும், உணவுச் சங்கிலியை பராமரிப்பதிலும் பறவைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. பூமியில் கிட்டதட்ட 11,000 பறவை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எவ்வளவு பறவைகள் இருந்தாலும், அவை வானில் பறக்கும் ஒருவிதமான அழகை கொடுக்கும். அத்துடன் அவை பறக்கும் பொழுது சீராக ஒரே மாதிரியாக பறந்து ஒரு V வடிவத்தை பிரதிபலிக்கும். பறவைகள் V வடிவத்தில் பறப்பதை பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமான, ஒருங்கிணைந்த மற்றும் அழகான காட்சியாக இருக்கும்.
ஆய்வுகளின்படி, பறவைகள் V வடிவத்தில் பறப்பதற்கு ஒரு தனித்துவமான காரணம் உள்ளது. ஏனெனின் வானில் பறக்கும் பொழுது காற்றியக்கவியல் மற்றும் பறவைகளின் ஒருங்கிணைப்பில் வேரூன்றி இருக்கும்.
அந்த வகையில், பறவைகள் V- அமைப்பில் பறப்பதற்கான காரணத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
V- வடிவ உருவாக்கம்
மேலோட்டமாக பார்க்கும் போது ஒரு பறவை முன்னாள் செல்லும், அதன் பின்னால் மற்ற பறவைகள் பின் தொடரும். இதனை வெளியில் இருந்து பார்க்கும் பொழுது V வடிவத்தில் பறப்பது போன்று இருக்கும். இதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் உள்ளது.
அதாவது, முன்னாள் செல்லும் பறவை காற்றை கிழித்து மற்ற பறவைகள் செல்வதற்கான பாதையை சீர்ப்படுத்திக் கொடுக்கும். இந்தக் குழுப்பணி பறவைக்கூட்டம் அதிக சக்தியை வீணாக்காமல் நீண்ட தூரம் பறக்க உதவியாக இருக்கிறது.
மேலும், பறவைகள் முன்னால் இருப்பவர்களால் உருவாக்கப்படும் காற்றோட்டத்தை பயன்படுத்தி துல்லியமாக நேரத்தையும், நிலையையும் தெரிந்து கொள்ளும். இது உயர் மட்ட ஒருங்கிணைப்பு மற்றும் புத்திசாலித்தனத்தை குறிக்கிறது.
விஞ்ஞானிகளின் பதில்
ஆஸ்திரியா- இத்தாலிக்கு இடம்பெயரும் இளம் Ibisபறவைகளிடம் ஆராய்ச்சியாளர்கள் டேட்டா லாகர்களைப் பயன்படுத்தி ஆற்றல் சேமிப்பு அமைப்பு பற்றி ஆய்வொன்றை நடத்தியுள்ளனர்.
அதாவது, Reintroduction திட்டத்தின் ஒரு பகுதியாக மைக்ரோலைட் விமானத்தால் வழிநடத்தப்பட்ட பறவைகள், அதிக துல்லியத்துடன் கண்காணிப்பட்ட போது இறக்கை துடிப்பு ஒத்திசைவு மற்றும் சரியான காற்றோட்ட பயன்பாட்டிற்கான நிலை சரிச் செய்கிறது. என்ற விடயத்தை கண்டுபிடித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |