இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் தாயார் காலமானார்!
பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் தாயார் கிம் பெர்னாண்டஸ் காலமானார்.
ஜாக்குலின் பெர்னாண்டஸ்
இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் தான் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.
இவருடைய தாயார் சிறிது காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில், நேற்றைய தினம் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் 24 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அன்று முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கிம் பெர்னாண்டஸ் மலேசியா மற்றும் கனேடிய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண், அவர் பஹ்ரைனில் விமானப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்தார்.
அதற்கு முன்னர் கடந்த 2022 ஆம் ஆண்டு, உடல்நல நெருக்கடியால் பஹ்ரைனில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
