விஜய் கருப்பு கோட் அணிந்து முதல்வராக பதவியேற்றது ஏன்?
ஆளுநர் முன் முதல்வராக விஜய் சட்டசபையில் பொறுப்பேற்றபோது கோட் அணிந்ததற்கு பின் ஒரு காரணம் உள்ளது.

கோட் சூட்டுடன் விஜய்
தவெக தலைவர் விஜய் நேற்று ஆளுநர் முன்னாள் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் பலரும் அழைக்கபட்டிருந்தனர்.
சினிமா பிரபலங்களும் அழைக்கபட்டிருந்தனர். மேலும் ந்த நிகழ்ச்சியில் த்ரிஷாவும் அழைக்கபட்டிருந்தார்.
மற்றவர்கள் சட்டசபையில் பொறுபேற்க வரும் போது வேஷ்டி சட்டையில் வருவார்கள். ஆனால் விஜய் முதல்வராக பொறுப்பேற்க கருப்பு கோட் சூட்டில் வந்திருந்தார். இது இணையத்தில் பேசுபொருளானது.

இதனையடுத்து தற்காலிக சபாநாயகராக கருப்பையாவிற்கு ஆளுநர் பதவி பிரமானம் செய்து வைத்த நிலையில் இன்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்கவுள்ளனர்.
முதலில், முதலமைச்சர் விஜய் அடுத்ததாக 9 அமைச்சர்கள், இதனை தொடர்ந்து சட்டசபை கட்சித் தலைவர்கள் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி, அடுத்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள், அரசு தலைமை கொறடா ஆகியோர் பதவியேற்பார்கள்.
சட்டசபையில் கோட் அணிந்து பதவியேற்கும் முதலமுதலமைச்சர் விஜய் தான் என்பது தற்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது. ஆனால் விஜய் கோட்சூட் அணிந்து வந்ததற்கு ஒரு காரணம் உள்ளது.

காரணம் என்ன ?
தனது முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்காக, முதலமைச்சர் விஜய் இதை தன் ஆடை வடிவமைப்பாளரிடம் முன்கூட்டியே வடிவமைத்ததாக கூறப்படுகின்றது.
விஜய்யின் ஆடைவடிவமைப்பாளர் கூறியதன் படி பீஸ்ட் திரைப்படத்தில் வரும் தனது ‘வீர ராகவன்’ கதாபாத்திரத்தைப் போன்ற ஒரு உடையை வடிவமைக்குமாறு தனிப்பட்ட முறையில் விஜய் கேட்டதாகவும் அதற்கேற்ற வகையில் அவர் வடிவமைத்து கொடுத்ததாகவும் கூறினார்.
இந்த நேர்த்தியான மேட் கருப்பு நிற உடையானது, விஜய்யை ஒரு “மாற்றத்திற்கான தலைவனாக” முன்னிறுத்தும் வகையிலும், அகில இந்திய அளவில் அனைவரையும் கவரும் வகையிலும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாஃபிர் அகமது தெரிவித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |