ரஷ்யர்கள் ஏன் உயிருள்ள தவளைகளை பாலில் வைத்தார்கள்? வியக்க வைக்கும் காரணம்
பண்டைய காலங்களில் உணவுப்பொருட்களை பாதுகாப்பதற்கு மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர் நோக்கி வந்தனர்.
தற்காலத்தில் பெரும்பாலான வீடுகளில் குளிர்சாதனப் பெட்டி இருக்கிறது. குளிர்சாதனப் பெட்டியின் முதன்மையான நோக்கம் பால் மற்றும் பிற உணவுகளை கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் வரையில் பாதுகாப்பது தான்.
ஆனால் பால் மற்றும் உணவுகள் பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்களால் நுகர்ப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் பாலை எப்படி கெட்டுப்போகாமல் பாதுகாத்தார்கள் என்று எப்போதாவது சிந்தித்ததுண்டா?
குளிர்சான பெட்டிகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர், ரஷ்யர்கள் தங்கள் பால் கெட்டுப்போகாமல் பாதுகாக்க கையாண்டதாக கூறப்படும் வினோதமான தந்திரம் குறித்தும் அதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் தொடர்பாகவும் இந்த பதிவில் பார்க்கலாம்.
தவளையை பயன்படுத்தினார்களா?
ரஷ்யர்கள் பால் கெட்டுப்போகாமல் இருக்க பால் இருக்கும் பாத்திரத்தில் ஒரு தவளையை விடுவார்கள். இந்த பால் சிகிச்சை எவ்வாறு வேலை செய்கிறது என்று ரஷ்யர்களுக்கு உறுதியாக தெரியவில்லை, ஆனால் அவர்கள் அதை நம்பினார்கள்.
ஆனால் ரஷ்ய தவளைகள் தங்கள் தோலின் மூலம் சுரக்கும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதாக தற்போது அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒரு ரஷ்ய வேதியியலாளர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு இந்த தவளைகளின் சுரப்பியை மூலக்கூறு அளவில் உடைக்க முயற்சித்து புதிய மருந்துகளின் கலவைகளை கண்டறிந்துள்ளனர்.
தவளைகளுக்கு பற்கள் அல்லது நகங்கள் இல்லை, எனவே அவற்றின் தோலில் இருந்து வெளியேறும் சுரப்புகள் பாக்டிரியா எதிர்ப்பு பண்டுகளை கொண்டுள்ளது என அறிவியல் ஆதாரங்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.
தவளையை வைத்து பாலைப் பாதுகாக்கும் பின்னணியில் உள்ள அசல் காரணத்தை அவர்கள் புரிந்துக்கொள்ளாத போதும் ஒரு தவளையின் இயற்கையாகவே குளிர்ச்சியான, ஈரமான உணர்வு கிடைக்கின்றமையால் அவற்றை பாலை பாதுகாக்க பயன்படுத்தினார்கள் என குறிப்பிடப்படுகின்றது.
பாலை புதியதாக வைத்திருக்க தவளைகளைப் பயன்படுத்துவது சற்று வினோதமாகவும் அருவருக்கத்தக்கதாகவும் இருந்தாலும் ஆனால் பழங்கால ரஷ்யர்கள் மத்தியில் தவளை அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |