சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கணுமா? முருங்கைக்காய் தான் சிறந்த தெரிவு
இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியிலும் இதன் ஆபத்து அதிகரித்து வருகிறது.
தற்காலத்தில் முறையற்ற உணவுப்பழக்கம் காரணமாக அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாகவே நீரிழிவு நோயாளிகள் உணவு தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இல்லாவிடில் பாரிய அபாயகரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
அந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் தினசரி உணவில் முருங்கைக்காயை சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முருங்கைக்காயயின் நன்மைகள்
குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்படுத்த குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
இதற்கு சிறந்த உதாரணமாக முருங்கைக்காய் காணப்படுகின்றது. முருங்கையில் ஆன்டிவைரல், பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு, தாமிரம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
முருங்கை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய முருங்கைக்காய் இலை, பூ ஆகிய அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை.
குறிப்பாக இதில் இன்சுலினை அதிகரிக்கும் புரதங்களும் நிறைந்திருப்பதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கு முருங்கைக்காய் சிறந்த தெரிவாக இருக்கும்.
முருங்கைக்காயில் க்ளைகோசைடுகள், கிரிப்டோ குளோரோஜெனிக் அமிலம் மற்றும் கேம்ப்ஃபெரால் 3 ஓ குளுக்கோசைடு போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்து இருப்பதால் சர்க்கரை நோயின் பாதிப்புகளை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது.
முருங்கைக்காயை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் போது சலிப்புத்தன்மை தோன்றினால், முருங்கைகாய் சூப், முருங்கைக்காய் பருப்புக்கூட்டு போன்ற வித்தியாசமான முறையில் சமையல் செய்து சாப்பிடலாம்.
இரத்த சரக்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு முருங்கைகாய் பெரிதும் உதவியாக இருக்கும்.
முருங்கைக்காயை தினசரி அதிகளவில் சாப்பிடுவதால் இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் இதய துடிப்பைக் குறைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
இது குறித்து கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக தைராய்டு பிரச்சனைகளுக்கு மருந்து உட்கொள்பவர்கள் முருங்கைக்காய் சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |