பண்டிகை நாளில் அலங்காரம் செய்வது ஏன்? பலரும் அறியாத அறிவியல் தகவல்
பொதுவாக பண்டிகை நாள் வந்து விட்டால் வீட்டிலுள்ள பெண்கள் அலங்காரம் செய்வதற்கு தங்களை தயார்ப்படுத்திக் கொள்வார்கள்.
புதிய ஆடைகள் மற்றும் ஆபகரணங்களை தேதி முடிவு செய்து வாங்கி அணிவார்கள். ஆண்களும் தற்போது தன்னை அழகுப்படுத்திக் கொள்ளும் விடயங்களில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
அப்படி நேற்றைய தினம் உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் கொண்டாடிய தீபாவளி பண்டிகை நாளில் புதிய புதிய ஆடைகளை அணிந்து கொண்டு மக்கள் செய்த அலப்பறைகளை பார்த்திருப்போம்.
இப்படி பார்க்கும் பொழுது ஏன் பண்டிகை நாளில் மாத்திரம் அலங்காரம் செய்து கொள்கிறார்கள் என்ற சந்தேகம் வந்தது. இது குறித்து தேடிய பொழுது அறிவியல் காரணங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
அந்த வகையில் பண்டிகை நாளில் தன்னை தானே அலங்காரம் செய்து கொள்வதற்கு என்ன காரணம் இருக்கும் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
அலங்காரம் செய்வது ஏன்?
1. வழக்கமான நாட்களை விட பண்டிகை நாளில் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதற்காக புதிய ஆடைகள், அலங்காரங்கள் செய்து கொள்கிறார்கள் என நினைக்கும் சிலருக்கு தெய்வங்களை போன்று தன்னையும் அழகாக வைத்துக் கொள்வது மகத்துவமான விடயம் என தெரியவதில்லை.
2. இறைவனுக்கு உரிய அந்த நாட்களில் அலங்காரம் செய்து கொண்டு பூஜை செய்தல், நைவேத்தியம் மற்றும் அலங்காரம் ஆகியன இறைவனுக்கான வடிவமாக பார்க்கப்படுகிறது.
3. அபிஷேகம், உடை மாற்றுதல் ஆகியன பண்டிகைகளில் செய்வதை பராம்பரியமாக செய்து வருகிறார்கள். இதுவே தமிழர்களின் முக்கிய கலாச்சாரமாக பார்க்கப்படுகிறது.
4. ஒரு குறிப்பிட்ட பண்டிகையின் முக்கியத்துவம் அந்த நாளில் நாம் அணிந்திருக்கும் ஆடை மற்றும் அணிகலன்களில் தான் இருக்கிறது. தெய்வீகத்தன்மையை அலங்காரத்தில் காணலாம்.
5. அலங்காரம் என்பது வழிபாட்டின் ஒரு ஆழ்ந்த அனுபவத்தையும் மன அமைதியையும் தருகிறது. அப்படியானால் அன்றைய நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். அதற்காகவே அலங்காரம் செய்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |