காலை 11 மணிக்கும் மாலை 4 மணிக்கும் இடையில் வெளியே செல்வது ஏன் ஆபத்தானது?
வெப்பம் மற்றும் வெயிலில் வெளியே செல்வது ஆபத்தானது. குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் செல்வதை மருத்துவர்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்துகின்றனர்.

மருத்துவர்கள் அறிவுரை
கோடைக்காலத்தில் நாள் முழுவதும் வெப்பநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். நாம் எதிர்பார்க்காத அளவில் வெப்பநிலை அதிகரிக்கும். அதுவும் குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெப்பநிலை உச்சமாக இருக்கும்.
சிலர் இதை புறக்கணிக்கிறார்கள். ஆனால் இந்த குறிப்பிட்ட நேரத்தில் வெப்பநிலை மக்களின் உடலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலான நேரம் பொதுவாக மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.
மேலும் இந்த நேரத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கூறப்படுகின்றது. இது வெப்பத்தாக்கம் மற்றும் வெயில்தாக்கம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

ஏன் ஆபத்தானது?
கோடையின் உச்ச வெப்பம் என்பது சூரியனும் வெப்பமும் உச்சத்தில் இருக்கும் நேரமாகும். சூரியனின் கதிர்கள் உச்சத்தில் இருக்கும்.
இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வது, உடலின் இயற்கையான குளிர்ச்சி அமைப்பிற்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்க நேரிடும்.
ஆரம்பத்தில் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் அது உடலில் பிற்போக்கில் பாரிய விளைவை கொண்டு வரும்.

நீரிழப்பு
- இந்த நேரத்தில் வெளியே செல்வது சூரிய ஒளியில் இருப்பது விரைவான நீரிழப்புக்கு வழிவகுக்கும். இந்த நேரத்தில் சிறிது நேரம் சூரிய ஒளியில் இருந்தால்கூட, உடனடியாக வியர்வையும் வறட்சியும் ஏற்படலாம். தாகம் அல்லது சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும் நேரத்தில் உடல் இன்னும் சிரமத்திற்குள்ளாவது பாதிப்பை உண்டாக்கும்.
சோர்வு
- அதீத வெப்பத்தின் காரணமாக உடலில் அதிகப்படியான வியர்வை ஏற்படும்போது, சோர்வும் பலவீனமும் உண்டாகத் தொடங்குகின்றன. பலருக்கு இது தெரிவதில்லை ஆனால் இந்த தாக்கம் தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் வழக்கத்திற்கு மாறான சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும்.
இதயம் மற்றும் இரத்த அழுத்தத்தின் மீதான பாதிப்புகள்
- கடும் வெப்பத்தின் போது வீட்டை விட்டு வெளியே செல்வது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும். இது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதிக வெப்பநிலை உள் உறுப்புகளுக்கு அழுத்தத்தை கொடுக்கும். வெப்பமான காலநிலையில், உடல் தன்னைத்தானே குளிர்விக்கக் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது, இதன் விளைவாக தோலுக்கு அதிக இரத்த ஓட்டம் ஏற்படுகிறது. இது இதயத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |