நறுக்கிய வெங்காயத்தை ப்ரிட்ஜில் வைக்கவே கூடாதாம்... ஏன் தெரியுமா?
பொதுவாகவே தற்போது எல்லோரது வீட்டிலும் தற்போது குளிர்சாத பெட்டி இல்லாமல் இருக்காது. சமைத்த உணவுகளில் இருந்து காய்கறி வரைக்கும் உணவை பழுதாகாமல் வைக்க தினமும் இந்த குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துகிறோம்.
அதிலும் காலையில் சமைத்த உணவுகளை இரவு வரைக்கும் பழுதாகாமல் வைத்திருக்கிறது. ஆனால் இந்தக் குளிர்சாதன பெட்டியில் நறுக்கிய வெங்காயத்தை மட்டும் வைக்க கூடாதாம் அது ஏன் என்பது தெரியுமா?
காரணம் என்ன?
வெங்காயத்தில் கந்தகம் அதிகமாக இருப்பதால் தான் வெட்டும் போது கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. இந்த நறுக்கிய வெங்காயத்தை குளிர்தான பெட்டியில் வைப்பதால் அதிக துர்நாற்றம் ஏற்படுகிறது.
நறுக்கிய வெங்காயத்தை குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் அதிலிருந்து அதிகமான பாக்டீரியாக்கள் வளரும்.
குளிர்சாதன பெட்டியில் வெங்காயத்தை அதிக நேரம் வைத்திருக்கும் போது அதிலிருக்கும் சத்துக்கள் அப்படியே இழக்க நேரிடும்.
நறுக்கிய வெங்காயத்தை குளிர்சாத பெட்டியில் வைக்கும் போது ஆக்ஸிஜனேற்றப்பட்டு விரைவில் பழுதாகி விடும் இதனை நாம் உண்ணும் போது வயிற்றுப் பிரச்சினைகள் அதிகம் ஏற்படும்.
நறுக்கிய வெங்காயத்தை குளிர்சாதன பெட்டியில் நேரடியாக வைக்க கூடாது மாறாக அதனை ஒரு பெட்டியில் வைப்பது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |