இரவில் நீல நிறத்தில் ஜொலிக்கும் மாயாஜால கடற்கரைகள்! என்ன காரணம்னு தெரியுமா?
பொதுவாகவே சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரையில் கடலை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எந்தநேரமும் ஓயாத அலைகளின் சத்தம்,அந்த சத்தத்தையும் மீறி கிடைக்கும் மன அமைதி என கடலை பற்றி சொல்லும் அத்தனையும் கூட கவிதையாகிப்போகும் என்றால் மிகையாகாது.
இயற்கையின் பிரமாண்டத்தை பறைசாற்றும் கடல் ஏராளமான உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும், பல்வேறு மர்மங்களின் இருப்பிடமாகவும் திகழ்கின்றது. இருப்பினும் இதெற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று இரவில் ஒளி வீசும் கடற்கரைகள் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகின்றதா?

ஆம் சில கடல்கரைகளில் இரவு நேரங்களில் இந்த அரிய காட்சி தோன்றி மக்களை வியப்பில் ஆழ்த்துகின்றது. இவ்வாறு கடல் நீல நிறத்தில் ஜொலிப்பதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
என்ன காரணம்?
பொதுவாக கடல் என்பது அதிக அளவு உயிரினங்கள் இருக்கின்ற பல்லுயிர் நிறைந்த பகுதி, அதிலும் குறிப்பாக கண்களுக்கு தெரியாத bacteria, fungi, algae போன்ற உயிரினங்கள் அதிகமாக வாழக்கூடிய இடமாக காணப்படுகின்றது.

அவ்வாறு கடலில் வாழும் ஒரு செல் உயிரியான டைனோ ப்ளாச்சுலேட்(dinoflagellates), கடல் மின்மினி பூச்சி என்று அழைக்கப்படுகிறது. அது தான் இரவில் சில நேரங்களில் கடல் ஜெலிக்கும் அரிய நிகழ்வுக்கு காரணமாகின்றது.

இந்த பாசி வகையானது கடலில் உள்ள நீரின் தன்மை மற்றும் அதற்கான ஊட்டச்சத்து சரியான விகிதத்தில் அமையும்போது சூரிய வெளிச்சத்தில் சார்ஜ் செய்து கொண்டு, எப்படி சோலார் விளக்குகள் ஒளிர்கின்றதோ அதுபோல் இரவில் இருளில் ஒளி வீசும் தன்மையை இயற்கையிலேயே கொண்டுள்ளது.

இந்த ஒரு செல் உயிரியின் உடலில் காணபப்படும் வேதிப்பொருளான லூசிபெரின், லூசிபரேஸ் ஆகியவை ஆக்சிஜனோடு சேரும்போது, ஒளி உருவாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பெயர்தான் Bioluminescence. அதனால் இரவில் ஒளி வீசும் கடற்கரையை “பயோலுமினெசென்ட் பீச்” என்று கூறுவார்கள்.
பல வகையில் இந்த உயிரி இருப்பதால், அதைப் பொறுத்து வெளியிடும் நிறங்களும் மாறுபடும். தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காகத்தான் இந்த உயிரினம் ஒளிர்வதாகச் ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மீன்கள் இந்த பாசியை சாப்பிட முயலும்போது இந்த பாசி தன்னிடம் இருக்கின்ற அந்த ஒளிர்வைக்காட்டி, மீன்கள் வந்தால் அவற்றை பயமுறுத்தி திசை திருப்ப இந்த ஒரு யுத்தியை பயன்படுத்துகின்றது. இது போன்ற பாசிகள் கடலில் எப்போதும் ஆழத்தில் இருக்கம் சில நேரங்களில் அவை கரைகளுக்கு வரும் போதும், அவை அதிகமாகும்போது மட்டுமே இவ்வாறு மிளிரும்.

இந்தியாவில் மொத்தம் ஆறு பயோலூமினெசென்ட் கடற்கரைகள் இருக்கின்றது. மும்பையில் உள்ள ஜூகு கடற்கரை, கோவாவில் உள்ள பிடல்பாத்திம் கடற்கரை, உடுப்பியில் உள்ள மட்டு கடற்கரை, சென்னையில் உள்ள திருவான்மியூர் கடற்கரை, லக்ஷத்தீவில் உள்ள பங்காரம் கடற்கரை, அந்தமானில் உள்ள ஹேவோலாக் கடற்கரை போன்ற கடற்கரைகளில் இந்த நிகழ்வு அரிதாக நிகழ்கின்றது. இவ்வாறு உலகில் பல பாகங்களிலும் உள்ள கடற்கரைகளில் நிகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |