இந்தியாவிலுள்ள பள்ளி பேருந்து மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன்?
இந்தியா மட்டுமல்லாமல் பெரும்பாலான நாடுகளில் உள்ள பள்ளிகளில் பேருந்து மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன.
இது குறித்து பலரும் யோசித்திருக்க வாய்ப்பு உள்ளது. ஏகப்பட்ட நிறங்கள் இருந்தும், மஞ்சள் நிறத்தில் பேருந்து வாங்கப்படுவதற்கான அறிவியல் உள்ளதா? என பரிசீலனை செய்த பொழுது ஒரு உண்மை தெரியவந்துள்ளது.
மஞ்சள் நிறத்தில் பேருந்து இருப்பது ஒரு தன்னிச்சையான முடிவாக தெரியவில்லை. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் வரலாற்று முடிவுகளின் விளைவு ஆகிய காரணங்களால் இந்த நிறம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அப்படியாயின், பள்ளி பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கான காரணத்தை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
மஞ்சள் நிறத்திற்கான காரணம்
பருவ கால மாற்றங்கள் ஏற்படும் பொழுது முன்னால் வரும் வாகனங்களுக்கும், மக்களுக்கும் மஞ்சள் நிறம் இலகுவாக தெரியும் என்பதால் இந்த நிறம் வைக்கப்பட்டுள்ளது.

விடியற்காலை, மாலைப்பொழுது, மூடுபனி மற்றும் மழை இப்படி எந்தவொரு நிலையிலும் மஞ்சள் நிறம் நன்றாக தெரியும். கண்களுக்கு உணர்திறன் அதிகமாக இருக்கும் நிறங்களில் இதுவும் ஒன்று.
இது தொடர்பான ஆய்வில், பள்ளி பேருந்து மஞ்சள் நிறத்தில் இருக்கும் பொழுது மனித கண்ணின் சிவப்பு மற்றும் பச்சை கோன்கள் தூண்டப்படுகிறது. இதனால் நீங்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அது பள்ளி பேருந்து தான் என இனங்கண்டுக் கொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |