ஹோட்டல் டவல்களும் படுக்கை விரிப்புகளும் வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன்?
பொதுவாகவே அனைவரும் வெளிநாட்டு பயணங்கள், சுற்றுலா செல்லும் சமயங்கள் என்பவற்றின் போதும் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளின் போதும் ஹோட்டலில் தங்கி செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும்.
வெவ்வேறு ஊர்களின் ஏன் வெவ்வேறு நாடுகளிலும் கூட, ஹோட்டல் அறைகளில் பயன்படுத்தப்புடும் டவல் மற்றும் படுக்கை விரிப்புகள் வெள்ளை நிறத்திலேயே இருக்கும். அதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?
ஏன் பெரும்பாலும் ஹோட்டல் அறைகளில் வெள்ளை நிற டவல் மற்றும் படுக்கை விரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன காரணம்?
வெள்ளை நிறம் தூய்மை மற்றும் அமைதியின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது. வெள்ளை நிற பொருட்களில் கறைகள் அல்லது அழுக்குகள் இருந்ததால் வெளிப்படையாக தெரியும். அனால் தான் ஹோட்டலில் டவல் மற்றும் படுக்கை விரிப்புகள் வெள்ளை நிறத்தில் பயன்படுத்தப்படுகின்றது.
விருந்தினர்களுக்கு கறையற்ற, நன்கு பராமரிக்கப்பட்ட இடத்தில் இருக்கின்றோம் என்ற உணர்வை ஏற்படுத்துவதறங்கு இந்த வெள்ளை நிற விரிப்பு மற்றும் டவல் துணைப்புரிகின்றது. அதனால் தூய்மையான இடத்தில் தூங்கும் திருப்தி விருந்தினர்களுக்கு கிடைக்கின்றது.
அதுமட்டுமன்றி வெள்ளை நிறமானது ஆடம்பர உணர்வைத் கொக்கின்றது. உயர்தர ஹோட்டல்கள் மற்றும் ஸ்பாக்களுடன் தொடர்புடையதாகவே வெள்ளை நிறம் அடையாளப்படுப்படுகின்றது. இது விருந்தினர்களுக்கு ஆடம்பர உபசரிப்பு கிடைப்பதை மறைமுகமாக உணர்த்துகின்றது.
வெள்ளை நிறம் உளவியல்ரீதியாகவும் ஆறுதல் அளிக்கின்றது. பொதுவாக மென்மையான நிறங்கள் மன அழுத்தத்தை குறைத்து நிம்மதியான உணர்வை அதிகரிக்க துணைப்புரிகின்றது.குறிப்பான வெள்ளை நிறத்துக்கு இந்த பண்ர் சற்று அதிகமாகவே இருப்பதாக ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மற்ற நிற துணிகளைப் போல சாயம் போகும் என்ற பிரச்சினை இன்றி ,வெள்ளை நிற போர்வைகள் மற்றும் துண்டுகளை ஒன்றாக துவைக்கலாம். அதனால் பராமரிப்பு செலவை குறைத்துக்கொள்ளவும் முடியும்.
ஹோட்டல்கள் ப்ளீச் மற்றும் உயர் வெப்பநிலை துவைக்கும் முறைகளைப் பயன்படுத்துவதால், சாயம் போவதைப் பற்றிய பிரச்சினையின்றி சரியான கிருமி நீக்கம் செய்வதற்கும் விருந்தினரின் சுகாமதரத்தை உறுதி செய்வதற்கும் இது வசதியாக இருக்கின்றது.
மேலும் வெள்ளை நிறம் அறையின் அளவை பெரியதாக காட்டுவதுடன் வெள்ளை நிற துணிகள் ஒளியைப் பிரதிபலிக்கின்றன, இதனால் அறைகள் பிரகாசமாகவும், பெரியதாகவும் தோற்றமளிக்கும் இது போன்ற முக்கிய காரணங்களை கருத்திற்கொண்டே பெரும்பாலும் ஹோட்டல் அறைகளில் வெள்ளை நிற டவல் மற்றும் படுக்கை விரிப்புகளை பயன்படுத்துகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |