தினம் ஒரு கொய்யா சாப்பிடுங்க... இந்த 10 ஆரோக்கிய பிரச்சினைகள் கிட்டவே வராது!
பொதுவாகவே அனைவராலும் விரும்பப்படும் ஒரு பழம் தான் கொய்யா. இது எல்லா காலங்களிலும் மலிவான விலையில் கிடைக்ககூடிய ஊட்டச்சத்துக்கள் சிறைந்த ஒரு ஆரோக்கியயமான பழமாக அறியப்படுகின்றது.
கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் வழங்குகின்றது. தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவர் கிட்டவே வர மாட்டார் என பலரும் சொல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஆனால் ஒரு கொய்யாவில் இரண்டு ஆப்பிள் மற்றும் 2 வாழையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது என்றால் நம்படுடிகின்றதா? ஆம் கொய்யா மலிவு விலையில் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டு ஏழைகளின் ஆப்பிளாக திகழ்கின்றது.
தினசரி ஒரு கொய்யா சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்ககூடிய முக்கிய பத்து ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஆரோக்கிய நன்மைகள்
செரிமான அமைப்பு
கொய்யா பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், தினசரி ஒரு கொய்யா பழம் சாப்பிடுவதால், இது செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கல், வயிற்று வலி, அஜீரணம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கின்றது. கொய்யா இலையிலும் இந்த பண்புகள் காணப்படுகின்றது.
இரத்த சர்க்கரை அளவு
நீரிழிவு நோயாளிகளுக்கு கொய்யாவும் அதன் இலைகளும் வரபிரசாதம் என்றே கூற வேண்டும். கொய்யாவில் குறைந்த கிளைசெமிக் குறியீடு காணப்படுகின்றது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலன்களை கொடுக்கக்கூடியது. மேலும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் கொய்யா முக்கிய இடம் வகிக்கின்றது.
இதய ஆரோக்கியம்
கொய்யாவில் பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் செரிந்து காணப்படுவதால், இது உடலின் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றது.
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், கொழுப்பையும் கட்டுக்குள் வைத்திருப்பதோடு, இதய நோய்களில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கின்றது. குறிப்பாக மாரடைப்பை தடுப்பதில் கொய்யா பெரும்பங்கு வகிக்கின்றது.
எடை இழப்பு
கொய்யா குறைந்த கலோரிகளையும் அதிக நார்ச்சத்தையும் கொண்டுள்ளது எனவே உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் தினசரி ஒரு கொய்யா சாப்பிட்டாலே போதும் இது எமை இழப்பை தூண்டும்.
சரும பளபளப்பு
கொய்யாவில் வைட்டமின் சி தவிர, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை அதிகமாக இருப்பதால், சருமத்தை பளபளப்பாக்குவதோடு, சருமத்தின் கொலாஜன் உற்பத்தைியை அதிகரித்து வயதான தோற்றத்தை தடுக்கின்றது.
கண்களுக்கு நன்மை
கொய்யாவில் வைட்டமின் ஏ செரிந்து காணப்படுகிறது, இதனால் கண் பார்வையை மேம்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. இதனால் கண்புரை, மாலைக்கண் நோய் போன்ற பல பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பு வழங்குகின்றது.
புற்றுநோய் தடுப்பு
கொய்யாவில் காணப்படும் லைகோபீன் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி புற்றுநோய் அபாயத்தை வலுவாக குறைக்கின்றது.
நோய் எதிர்ப்பு சக்தி
கொய்யாவில் வைட்டமின் சி நிறைவாக இருப்பதால், இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது, குறிப்பாக குளிர்காலத்தில், ஏற்படும் சளி, இருமல் மற்றும் காய்ச்சலிலிருந்து உடலை பாதுகாக்கின்றது.
மன அழுத்தம்
கொய்யாவில் மெக்னீசியம் இருப்பதால் மெக்னீசியம் நமது உடலின் தசைகளை தளர்த்தி மன அழுத்தத்தில் இருந்து விடபட பெரிதும் துணைப்புரிகின்றது.
கர்ப்ப காலத்தில் குழந்தையின் ஆரோக்கியம்
கர்ப்ப காலத்தில் கொய்யா சாப்பிடுவது தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் இது குழந்தையின் வளர்ச்சியையும் மேம்படுத்த உதவுகின்றது.
கொய்யா சாப்பிட்ட உடனேயே தண்ணீர் பருக கூடாது. இது கொய்யாவில் உள்ள மெக்னீசியத்துடன் தாக்கம் புரிவதால் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே குறைந்தது 30 நிமிடங்களின் பின்னர் தண்ணீர் குடிப்பது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |