விமானங்களில் ஜன்னல் ஏன் வட்ட வடிவில் உள்ளது தெரியுமா?
நம்மிள் பலர் விமானங்களில் பயணம் செய்திருப்பார்கள்.
அப்போது பார்க்கும் பொழுது விமானங்களில் உள்ள ஜன்னல்கள் மிகவும் சிறியதாகவும் வட்ட வடிவிலும் இருக்கும்.
மற்ற வாகனங்களிலும் பார்க்க விமானம் சற்று பெரிதாக இருக்கும். மாறாக அதன் ஜனனல்கள் மாத்திரம் மற்ற வாகனங்களிலும் பார்க்க சிறியதாகவும் இருக்கும். இது ஏன் என்பது குறித்து நம்மிள் பலரும் சிந்தித்து பார்த்திருப்போம்.
அந்த வகையில் விமானங்களில் ஏன் ஜன்னல்கள் சிறியதாகவும் வட்ட வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
அறிவியல் காரணிகள்
1. விமானங்களில் பெரிய ஜன்னல்கள் வைத்தால் அதிக உயரத்தில் பறக்கும் பொழுது சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. சிறிய ஜன்னல்கள் ஒளியை கட்டுக்குள் வைக்கும்.
2. உயரத்தில் பறக்கும் வானூர்திகளாவன, கடுமையான அழுத்தம் மற்றும் வெப்பநிலை ஏற்ற இறக்கங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில் தாங்கும் விதம் கொண்டு வானூர்திகள் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
3. வானூர்திகளின் ஜன்னல்களை பெரிதாக வடிவமைத்தால் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்க கணிசமாக அதிகரிக்கும்.
4. வானூர்தியிலுள்ள சிறிய ஜன்னல்கள் பல அடுக்குகள் பூச்சுகள் மற்றும் சிறப்புப் பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவை பறவைகளின் தாக்குதல்கள், குப்பைகளின் தாக்குதல்களுக்கு எதிராக போராடும்.
5. அதிக உயரத்திலும் வேகத்திலும் வட்ட வடிவ ஜன்னல்கள் உடையாமல் இருக்கும். அதே சமயம், சதுர வடிவான ஜன்னல்களால் காற்றின் அழுத்தம் தாங்க முடியாமல் ஜன்னல் உடைய வாய்ப்பு உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |