ஒரு ரூபாய் நாணயத்துக்கு iPhone! பின்னணியில் உள்ள ரகசியம் இது தான்
1970-ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட இந்தியாவின் ஒரு ரூபாய் நாணயத்தை கொடுத்தால், ஒரு ஐபோன் இலவசமாக வழங்கப்படும் என்ற காணொளி தற்போது இணையதளங்களில் படுவைரலாகி வருகின்றது.
இந்திய மதிப்பில் சுமார் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போனை வெறும் ஒரு ரூபாய்க்கு தருவதாக ஒரு கடைக்காரர் விளம்பரம் செய்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த செய்தி உண்மையானதாக இருக்க வாய்ப்புள்ளதாக நாணய சேகரிப்பாளர்கள் கருதுகின்றனர். காரணம், 1970-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த ஒரு ரூபாய் நாணயங்கள் 'நிக்கல்' உலோகத்தினால் தயாரிக்கப்பட்டன.
ஆனால் இரண்டாம் உலக போரின் பின்னர் ஏற்பட்ட நிக்கல் தட்டுப்பாடு காரணமாக, நிக்கல் உலோகத்தின் விலை ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டது. இந்த நாணயங்கள் அச்சிடப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது.

தற்போது இந்தியா முழுவதும் இத்தகைய அரிய நாணயங்கள் ஏறதாழ மூவாயிரத்திற்கும் குறைவாகவே புழக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதனை பெரும்பாலானவர்கள் பத்திரப்படுத்தி வைத்திருக்க மாட்டார்கள்.
ஆனால் அரிய வகை நாணயங்களை சேகரிப்பவர்கள், இந்த 1970-ஆம் ஆண்டு நாணயத்தை ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் கொடுத்து வாங்கவும் கூட தயாராக இருப்பார்கள்.
எனவே, அந்த நாணயத்தின் மதிப்பை கணக்கிட்டால், ஒரு ஐபோன் வழங்குவது எந்த விதத்திலும் நட்டத்தை ஏற்படுத்துவதாக இருக்காது என்று கூறபப்படுகின்றது.
இருப்பினும், இத்தகைய விளம்பரங்களை நம்பி செல்லும் முன், அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்துகொள்ள வேண்டியதும் அவசியம்.