விஜயின் திருமலை படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை யார் தெரியுமா? வெளிவந்த புகைப்படம் வைரல்
தளபதி விஜய் நடிப்பில் வெளியான திருமலை திரைப்படத்தில் முதலில் கமிட் ஆன நடிகை தொடர்பான புகைப்படமொன்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
திருமலை திரைப்படம்
நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்த திரைப்படம் தான் திருமலை.
இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வர வேற்பு இருந்தது. ரமணா இயக்கத்தில் விஜய், ஜோதிகா, ரகுவரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இன்றும் இந்த படத்தில் இடம்பெற்ற நீயா பேசியது... பாடல் பலரின் விருப்பத்துக்குரிய பட்டியலில் இடம் பிடித்து விடுகின்றது.
இப்படம் மொத்தமாக சுமார் ரூ. 39 கோடி வரை வசூல் செய்து அப்போதைய காலகட்டத்தில் மாபெரும் சாதனை படைத்திருந்தது.
இந்த நிலையில் திருமலை படம் குறித்த செய்தி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. திருமலை படத்தில் நடிகர் விஜய்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
[MXWTXA ]
ஆனால் இந்த படத்தில் நடிகர் விஜய்கு முதலில் ஜோடியாக நடித்த நடிகை நம்ரதா ஷிரோத்கர் தான். பின்னர் நர்மதாவின் ஸ்க்ரீன் பிலேவில் இயக்குனர் திருப்தியடையாத காரணத்தினால் நர்மதாவுக்கு பதிலாக ஜோதிகாவை புக் செய்தாராம்.
[UR693 ]
படப்பிடிப்பு தலத்தில் நம்ரதா ஷிரோத்கருடன் விய் நடித்த காட்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
நம்ரதா ஷிரோத்கர் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |